Kishore Kumar Hits

NST - Bigger Dreams şarkı sözleri

Sanatçı: NST

albüm: Bigger Dreams


நீ சொல்லு ஒவ்வொரு வார்த்தையிலும் சிறு பொய்களும் உண்டு
காணும் ஒவ்வொரு காட்சியிலும் 100 கற்பனை உண்டு
காலம் அரியது என்றாலும் கனவுகள் ஆயிரம் உண்டு
என் இயலாமை வெல்வேன் நானும் இன்று நம்பிக்கை கொண்டு
கால்களும் கட்டியே தவித்தேன் சிகரம் உச்சத்திலே
கைகளும் எட்டியே பிடிப்பேன் உயரம் சூட்சமமே
புகழும் தேடியே ஓடினேன் துயரம் தாங்கிக் கொண்டே
கண்களும் மூடியே தாண்டிச் சென்றேன் அனல் மடியிலே
ஏய் ஏய்
தோட்டாக்கள் துளைக்கும் சத்தம் கனவினை பறிக்க முயன்றாலும்
போராட்டம் தொடரும் என் பாதை இனிதே விரிவாகும்
கூட்டாளி என்றாலும் விதை சூட்சமம் இங்கே பரிதாபம்
பாட்டாளி வெல்வான் ஓர் நாளில் அவனின் சரித்திரம் உருவாகும்
பிரபஞ்சம் முழுதும் பரவும் பயணம்
உன்னால் என்னால் அது ஒரு படி உயரும்
தந்திரம் கவிழும் மந்திரம் பலிக்கும்
முன்னாள் இந்நாள் அதில் நரிகள் சரக்கும்
ஆயுதம் இன்றியும் வஞ்சனை ஒளியும் பேசும்
வரலாற்றில் உன் புகழ் பரவும்
ஜனனம் மரணம் நடுவரின் வரம்
செல்லும் நாள் வரை என் தேடல் தொடரும்
வா மங்கை பேச்சை மறந்து நீயும் வா
உன் கனவை தேடி விரைந்து நீயும் வா
உன் உலகம் காண நீயும் ஓடி வா நி வா நி வா வா வா வா வா
என் அரியாசனம் உந்தன் சொப்பனம்
அத்திராசம் உந்தன் ஆயுதம் தசாப்தம்
கடந்த வனவாசம் பிரபஞ்சம் எங்கிலும் எதிரொளிக்கும்
ஒரு நாள் நிகழும் நண்பனே
அதுவரை தொடரும் என் யாகமே
என் பேனா நிக்காது என்றுமே
அடங்காது தமிழின் மேல் கொண்ட தாகமே
நீ காணும் கனவுகள் யாவுமே
உன் பின்னாலே துரத்துமே
நீ கண்டதும் காண்பதும் ஓர் புதிராய்யாகின்றதே
We have a dream வாழ்க்கை போகும்
திசையில் வானம் நீண்டு போகும்
எல்லை தாண்டும் வரையில் இருளும் சூழும்
உன்னை உனக்குனர்துமே
பல கஷ்டங்கள கடந்து நானும்தா இங்க வரவில்ல பறந்து
எப்போது இசையே எனக்கு மருந்து இப்போ நா உனக்கு தாறே rap விருந்து
நானும்தா வாறவழியெல்லாம் விழுந்து அடியும் பட்டு பட்டு மெல்ல எழுந்து
இப்போ நா வேற மாறி ஒரு பருந்து எனக்கு தலை வணங்கு நீ எழுந்து yo
எல்லோரும் என்ன முட்டாள்ப்பயலுனு சொல்லும்போது நானு கண்டுக்கள
எண்ணத்தின் படி தான் வாழ்க்கையும் அமையும் சொல்லும்போதும் ஏன் கத்துக்கல
எனக்கு புடிச்ச வாழ்கைய வாழவும் சமூகம் இன்னுமே ஒதுக்கள
மெல்ல மெல்ல நாங்க மேல போகும் போது பொறாமையில் உன்னையே குதிக்குவ
நானும்தா படிச்சா school லு எப்பவும் நா மட்டும் fool லு
இன்னக்கி குளிக்க போறேன்னு வாங்கடா rap என்னும் swimming pool லு
குடிக்க எனக்கு கூல் லு என்னடா நீ ஒரு ஆளு
முடிஞ்சா நிறுத்தி பாரு இப்போ நா உனக்கு சொல்லுறே கேளு
உனக்குள்ளே உள்ள தீயும் சத்தம் போட்டு கொழுந்து விட்டுதா எறியட்டும்
உள்ளே நீயும் பூட்டி வைக்க வேணா வெளியில் ஒளியாய் தெறியட்டும்
சும்மா இல்லை இது தொட்டால் சுடும் என்று எல்லோருக்கும் இன்று தெறியட்டும்
கஷ்டங்கள் எல்லாமே கண்ணீராய் சிந்திட கவலை எல்லாமே கறையட்டும்
நீ காணும் கனவுகள் யாவுமே
உன் பின்னாலே துரத்துமே
நீ கண்டதும் காண்பதும் ஓர் புதிராய்யாகின்றதே
We have a dream வாழ்க்கை போகும்
திசையில் வானம் நீண்டு போகும்
எல்லை தாண்டும் வரையில் இருளும் சூழும்
உன்னை உனக்குனர்துமே
V da monsta back again, I'm rocking with the future,
Started off with nothing now I know "we are the rulers",
இசையா இது துறையா முழு உலகமும் எனை கேட்க,
இதுவே எந்தன் கனவு என்று கவி வரிகளில் தாக்க,
சென்றேன் ஆனேன் சொல்லிசை புலவரில் பாதி,
குறை குறிப்புரை அதை தாண்டி,
கனவதின் வழி தனி நோக்கி,
கயவர்கள் தலை கரம் ஏந்தி,
வலிகளை வழி ஒளியாக்கி,
சொல்லிசை அதை அணியாக்கி,
உறங்காமல் பணியாற்றி,
இது போர்களமாய் தெரியும்,
வெறி கொண்ட நரிகளும் ஆடும்,
மதியால் விதி மாற்ற எதிரிகள் கால் மன்றாடும்,
என் இளைமையின் சாபம் துரோகம் இதுவே என் பாடம்,
வினை விதைத்தவன் மாயம் மறையும் எதிகாலம்,
தீரா இசை தாகம், சொல்லிசை இடை தியானம்,
செய்தேன் பல தியாகம் மன நிறைவே வருமானம்,
மறந்தேன் தடுமாற்றம், படைத்தேன் புதிதாய் பாகம்,
திரௌபதியாய் சொல்லிசை எம் மூவரினது தாரம்
நீ காணும் கனவுகள் யாவுமே
உன் பின்னாலே துரத்துமே
நீ கண்டதும் காண்பதும் ஓர் புதிராய்யாகின்றதே
We have a dream வாழ்க்கை போகும்
திசையில் வானம் நீண்டு போகும்
எல்லை தாண்டும் வரையில் இருளும் சூழும்
உன்னை உனக்குனர்துமே

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar