Kishore Kumar Hits

Shabir Sulthan - Enil Paaindhidum Kaadhalae şarkı sözleri

Sanatçı: Shabir Sulthan

albüm: Enil Paaindhidum Kaadhalae (From "Sinam")


இதன் முன்னே சிந்தாத மழையே
இதயத்தில் ஏன் வீழ்கிறாய்
இதன் முன்னே நில்லாத நொடியே
யுகம் ஒன்றாய் ஏன் நீள்கிறாய்
உறவேதும் இல்லாமல்
குறையேதும் சொல்லாமல்
தனியாக வாழ்ந்தேனே
பிறகு உனை கண்டேனே
ஒரு மோதலாய் அன்று
சிறு தீண்டலாய் இன்று
அன்று நட்பு என்றேனே
இன்று மாற்றி கொண்டேனே
நெஞ்செல்லாம் மோதி மோதி
எனில் பாய்ந்திடும் காதலே
பேசாத வாசம் போலே
எனில் பாய்ந்திடும் காதலே
நெஞ்செல்லாம் மோதி மோதி
எனில் பாய்ந்திடும் காதலே
பேசாத வாசம் போலே
எனில் பாய்ந்திடும் காதலே

புயல் காற்றில் குடை போல்
என் வாழ்வினை தலைகீழென்றே மாற்றினாய்
குடைக்கம்பி வளைக்கின்ற வேளையில்
நனைத்தாயே தூறல்களாய்
காதல் ஈரம் காய ஆசை தீயானை
தீயின் வெப்பம் ஆற
முதனின்று மறுபடி தொடங்குகிறாய்
முடிவேதும் இல்லாமல் (தொடர்ந்திடு)
இளைப்பாற நில்லாமல் (பறந்திடு)
ஒரு வார்த்தை சொல்லாமல் (அணைத்திடு)
விழியாலே கொல்கின்றாய் (கனவிதுவா)

இதுதான் அன்று நான் கண்ட கனவா
முழுதாய் இன்று மெய்யாகுது
இதுதான் அன்று நான் கேட்ட உலகா
அழகாய் இங்கு உண்டானது
நகை ஏதும் வேண்டாமே
புது சேலை வேண்டாமே
கெட்டி மேளம் வேண்டாமே
இரு நெஞ்சம் ஒன்றாக
நெஞ்செல்லாம் மோதி மோதி
எனில் பாய்ந்திடும் காதலே
பேசாத வாசம் போலே
எனில் பாய்ந்திடும் காதலே (எனில் பாய்ந்திடும் காதலே)

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar