அடையாளம் ஏராளம்
கல்யாண புடவையில்
கண்ணீரை துடைத்துக்கொண்டே
தன் காதல் நினைவுகளை
கடந்து போகிறாள்
கல்யாண பெண் ஒருத்தி
பழைய காதலின் அடையாளங்கள்
அவளின் விழியெல்லாம் வலம் வருகின்றன
அடையாளம் ஏராளம்
ஆளெங்க? பேரெங்க?
நெனப்பிருக்கு நெஞ்செல்லாம்
நீயெங்க? நானெங்க?
கும்பி எரியுதடி
கொந்தளிக்கும் எம்மனசில்
தும்பி பறக்குதடி
தோணுதடி பழையகதை
♪
அடையாளம் ஏராளம்
ஆளெங்க? பேரெங்க?
நெனப்பிருக்கு நெஞ்செல்லாம்
நீயெங்க? நானெங்க?
கும்பி எரியுதய்யா
கொந்தளிக்கும் எம்மனசில்
தும்பி பறக்குதய்யா
தோணுதய்யா பழையகதை
♪
மின்னல் வெட்டும் ராத்திரியில்
சன்னல் பக்கம் நீ அழைக்க
அந்நேரம் பாத்து அஞ்சாறு நாய் கொலைக்க
வெறிச்சோடிப் போயிருந்த வீதியில நான் விழுந்து
தெறிச்சோடிப் போனதுக்குத் தெருவிளக்கு அடையாளம்
சொட்டாங்கல்லு ஒண்ணு எந்தொடைப்பக்கம் தவறிவிழ
கல்லெடுக்கும் சாக்குல நீ கள்ளத்தனம் பண்ண
ஆடி விழுந்ததுக்கும் ஆளவிடு சாமியின்னு
ஓடி ஒளிஞ்சதுக்கும் ஓடைக்கரை அடையாளம்
அடையாளம் ஏராளம்
ஆளெங்க? பேரெங்க?
நெனப்பிருக்கு நெஞ்செல்லாம்
நீயெங்க? நானெங்க?
கும்பி எரியுதடி
கொந்தளிக்கும் எம்மனசில்
தும்பி பறக்குதடி
தோணுதடி பழையகதை
♪
சீலகட்டத் தெரியாத சிறுமியின்னு பாக்காம
வேளகெட்ட வேளையில வெறிகொண்டு நீயணைக்க
மாமான்னு மிரண்டதுக்கும்
மணமாலை கேட்டதுக்கு
ஆமான்னு சொன்னதுக்கும்
அம்மன்கோயில் அடையாளம்
ஊருக்கே தெரியாம யாருக்கோ பெண்டாகி
குதிரைவண்டி ஏறிக் கொடிக்கால் கடக்கையில
மடிவிழுந்த கண்ணீரு மழையாகிப் போனதுக்கு
இடிவிழுந்த ஆலமரம் இன்னைக்கும் அடையாளம்
அடையாளம் ஏராளம்
ஆளெங்க? பேரெங்க?
நெனப்பிருக்கு நெஞ்செல்லாம்
நீயெங்க? நானெங்க?
கும்பி எரியுதடி
கொந்தளிக்கும் எம்மனசில்
தும்பி பறக்குதடி
தோணுதடி பழையகதை
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri