இது அம்மாவை பற்றிய கவிதை இனியவர் இசை பாடியிருக்கிறார் இறந்தும் இறவாத பாடகர் S.P. பாலசுப்ரமணியம் ♪ (ஆரிராரோ-ஆரிராரோ) (ஆ-ஆ) (ஆ-ஆ-ஆ) (ஆ-ஆ-ஆ) ஆயிரம் தான் கவி சொன்னேன் அழகழகா பொய் சொன்னேன் பெத்தவளே உன் பெருமை ஒத்தவரி சொல்லலையே காத்தெல்லாம் மகன் பாட்டு காயிதத்தில் அவன் எழுத்து ஊரெல்லாம் மகன் பேச்சு உன் கீர்த்தி எழுதலையே எழுதவோ படிக்கவோ ஏலாத தாய் பத்தி எழுதி என்ன லாபமின்னு எழுதாம போனேனே ஆயிரம் தான் கவி சொன்னேன் அழகழகா பொய் சொன்னேன் பெத்தவளே உன் பெருமை ஒத்தவரி சொல்லலையே ♪ (ஆ-ஆ-அ-ஆ-ஆ) கதகதன்னு களிக் கிண்டி களிக்குள்ளே குழி வெட்டி கருப்பட்டி நல்லெண்ணெய் கலந்து தருவாயே தொண்டையிலே அது எறங்கும் சுகமான இளஞ்சூடு மண்டையில இன்னும் மசமசன்னு நிக்குதம்மா வறுமையில நாமபட்ட வலி தாங்க மாட்டாய் பேனாவை நான் எடுத்தேன் பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன் ♪ கல்யாணம் நான் செய்ஞ்சு கதியெத்து நிக்கையிலே பெத்த அப்பன் சென்னை வந்து சொத்தெழுதி போன பின்னே அஞ்சாறு வருஷம் உன் ஆசை முகம் பார்க்காம பிள்ளை மனம் பித்தாச்சே பெத்த மனம் கல்லாச்சே பாசமுள்ள வேளையிலே காசு பணம் கூடலையே காசு வந்த வேளையிலே பாசம் வந்து சேரலையே (ஓ-ஹோ-ஹோ-ஹோ-ஹோ) (ஓ-ஹோ-ஹோ-ஏ-ஏ-ஏ-ஏ) வைகையிலே ஊர் முழுக வல்லூறும் சேர்ந்தழுக கைப்பிடியா கூட்டிவந்து கரை சேர்த்து விட்டவளே அம்மா ஆ-ஆ-ஆ எனக்கொன்னு ஆனதுன்னா உனக்கு வேற பிள்ளையுண்டு உனக்கேதும் ஆனதுன்னா எனக்கு வேற தாய் இருக்கா? எனக்கு வேற தாய் இருக்கா? (ஆரிராரோ-ஆரிராரோ) எனக்கு வேற தாய் இருக்கா? (ஆரிராரோ-ஆரிராரோ)