Trisha - Chinnanjiru Nilave şarkı sözleri
Sanatçı:
Trisha
albüm: Ponniyin Selvan Part-2 (Original Motion Picture Soundtrack)
சின்னஞ்சிறு நிலவே என்னை விட்டு
ஏனடி நீங்கினையோ
ஒரு கொள்ளை புயல் அடித்தால் சகியே
செஞ்சுடர் தாங்கிடுமோ
அர்த்தம் அழிந்ததடி அன்னமே
ரத்தமும் ஓய்ந்ததடி
ஒரு கொற்றமும் வீழ்ந்ததடி சகியே
யாதினி கோள் யானே
யாங்குனை தேடுவனோ அன்னமே
ஏதினி செய்குவனோ
போங்கூழ் ஆனதடி அன்னமே
தீங்கிருள் சூழ்ந்ததடி
♪
துள்ளும் நயனம் எங்கே வெல்லம் போல்
சொல்லும் மொழிகள் எங்கே?
கன்னல் சிரிப்பும் எங்கே என்னை சேர்
ஆரண மார்பும் எங்கே?
மஞ்சின் இளங்குளிராய் நெஞ்சிலே
சேர்ந்திடும் கைகள் எங்கே?
கொஞ்சும் இளம் வெயிலாய் என்னையே
தீண்டிடும் பார்வை எங்கே?
சின்னஞ்சிறு நிலவே என்னை விட்டு
ஏனடி நீங்கினையோ
ஒரு கொள்ளை புயல் அடித்தால் சகியே
செஞ்சுடர் தாங்கிடுமோ
♪
கானகம் எரியுதடி வஞ்சியே
ஞாலமும் நழுவுதடி
வானம் உடைந்ததடி அழகே
பூமியும் சரிந்ததடி
கொள்ளை நெருப்பினிலே தள்ளியே
எப்படி நீங்குதியோ
எற்றடி குற்றமுற்றேன் பிரிவை
சாபமாய் தந்தனையோ
♪
சின்னஞ்சிறு நிலவே என்னை விட்டு
ஏனடி நீங்கினையோ
ஒரு கொள்ளை புயல் அடித்தால் சகியே
செஞ்சுடர் தாங்கிடுமோ
அர்த்தம் அழிந்ததடி அன்னமே
ரத்தமும் ஓய்ந்ததடி
ஒரு கொற்றமும் வீழ்ந்ததடி சகியே
யாதினி கோள் யானே
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri