தொப்புள் கொடியில் வந்த உறவே அன்பு துணை நீ அம்மா பெத்த நிமிசம் செத்து பொளச்ச என் உசுரும் நீ அம்மா பிள்ளை அழுதேன் கண்டு ரசிச்சே நான் பொறந்த பொன்நாளில் பிள்ளை சிறிக்க நீயும் வடிச்ச ஆனந்த கண்ணீரே தொப்புள் கொடியில் வந்த உறவே அன்பு துணை நீ அம்மா பெத்த நிமிசம் செத்து பொளச்ச என் உசுரும் நீ அம்மா ♪ காதோரம் உன் தாலாட்டுதான் அறிமுக தமிழ் பாட்டு உன் சேலையே என் போர்வையாய் குளிருக்கு இதமாச்சு அம்மா மடி நிலவொளியில் நான் தூங்கிய தலைகானி ஒரு கோடி பணம் வந்தும் உனக்கீடு ஆகுமா தொப்புள் கொடியில் வந்த உறவே அன்பு துணை நீ அம்மா பெத்த நிமிசம் செத்து பொளச்ச என் உசுரும் நீ அம்மா ♪ எந்நாளுமே உன் வார்த்தைதான் மகனுக்கு வேதாந்தம் உன் பாதமே நான் தேடிய நிரந்தர போதி மரம் உன் கூந்தலில் நரை விழுந்தும் நீதானம்மா உலகழகி மறு ஜென்மம் உனக்கே நான் மகனாக வேண்டுமே தொப்புள் கொடியில் வந்த உறவே அன்பு துணை நீ அம்மா பெத்த நிமிசம் செத்து பொளச்ச என் உசுரும் நீ அம்மா பிள்ளை அழுதேன் கண்டு ரசிச்சே நான் பொறந்த பொன்நாளில் பிள்ளை சிறிக்க நீயும் வடிச்ச ஆனந்த கண்ணீரே