Kishore Kumar Hits

ADK - Suicide şarkı sözleri

Sanatçı: ADK

albüm: Suicide


இந்த உலகில் நாம் கால் பதிக்கும் போது
தாய் தகப்பன் அறவனைப்பும் பாசத்துடன் உலா வருகிறோம்
சில வருடம் கடந்த பின்பு காதலும் தொத்திக்கொள்கிறது
சில நேரம் அதே காதல் நம்மை தூக்கி எறியவும் செய்கிறது
அதற்காக நம் உயிரை நாம் இழக்கலாமா?
நம் தாய் தந்தையை இழக்கலாமா?
சொல்
பிறந்த நாள் முதல் கொண்டு தகப்பன் சுமந்தான்
உன்னை தோலில் அவன் உயிரை பனையம் வைத்து வேர்வை சிந்தி
இரவும் பகலும் என்று பாரபட்சம் பார்க்காமல்
கடன் உடன் என்று உனக்காக வாழ்ந்தவன்
அதற்கு மேல ஒரு படி உன்னை பெற்றதாய்
மார்பில் தித்திப்பால்
மாதவலியுடன் சுமந்தால் குழந்தாய் என்று பாசமலை பொழிந்தால்
அவளை மறந்து என்ன செய்ய போகிறாய்
தற்கொலை முடிவில்லை தோழா தோழி கேட்டுக்கொள்
காதலின் வலி எனக்கும் தெரியும் புரிந்து கொள்
உன்னை தான் வேண்டாமென்று தூக்கி எறிந்த உள்ளத்துக்காக
உந்தன் வாழ்க்கையை முடித்து கொள்ள போறியா சொல்
பாடையில் படுத்தால் அவனோ அவளோ
காதலை நினைத்து அழுவார் நினைத்தாயோ
புத்தகம் பிடிக்க வேண்டிய இந்த கைகள்
தூக்கு கயிரை தேடி அலையுது வலிகள்
இறப்பு பதிலில்லை தோழா தோழி
தற்கொலை முடிவில்லை தோழா தோழி
இறப்பு பதிலில்லை தோழா தோழி
தற்கொலை முடிவில்லை தோழா தோழி
உன் கூட யாரில்லை நண்பர்கள் இல்லையா சொல்
உன் கூட யாரில்லை தாய் தந்தையில்லையா சொல்
காதலை இழந்தால் சுயநலத்துக்காக எமதர்மனை தோழனாக தான் ஆக்கி கொள்வயா சொல்
மருத்துவம் வக்கில் விஞ்ஞானி பொறியாளர் தொழிலதிபர் கலைஞன் என்று பல மகுடம் உனக்காக தானே காத்து கொண்டு இருக்கிறது
தோழனே தோழியே சொல் உணர்ந்து
பழகும் பொழுது உயிரை கொடுத்து
கவிதை எழுதி காமத்தில் கலந்து உணர்வை பகுந்து நம்பிக்கை கொடுத்து கனவை வளர்த்து
அதற்கு பிறகு
உன்னையும் மறந்து
அதற்கு பிறகு
நம்பிக்கை துளைத்து
அதற்கு பிறகு
உன்னையும் வெறுத்து
அதற்கு பிறகு
காதலை உடைத்து
வண்டி என்று அழைக்காதே மாஜி காதலியை பார்த்து
சுயமரியாதையை இழந்து விடாதே
அரக்கன் என்று அழைக்காதே மாஜி காதலனை பார்த்து
சுயமரியாதையை இழந்து விடாதே
Drop that sucide thought my sister
Drop that sucide thought my brother
Drop that sucide thought my sister
Drop that sucide thought my brother
Drop that sucide thought my sister
Drop that sucide thought my brother
Drop that sucide thought my sister
Drop that sucide thought my brother
இறப்பு பதிலில்லை தோழா தோழி
தற்கொலை முடிவில்லை தோழா தோழி
இறப்பு பதிலில்லை தோழா தோழி
தற்கொலை முடிவில்லை தோழா தோழி

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar