செவ்வந்தி பூவே
செவ்வான தீவே
தேனாகி வந்தாய் முன்னாலே
ஆணாகி போனேன் உன்னாலே
என் வீட்டுக்காரா
தென்னாட்டு தீரா
கண்ணாக வந்தாய் முன்னாலே
பெண்ணாகி போனேன் உன்னாலே
♪
அடியே வங்கிகாரி
முத்தம் கடனா தாடி
வட்டி அசலுக்கு மேல
போட்டு தாரேன்
உன்ன பிணையா தந்து
உயிர எழுதி தந்தா
இரவுக்கு என்ன
கடனா தாரேன்
கல்யாணச்சேலை கொஞ்சம் கசங்கட்டும்
கண்ணாலா இன்னும் கொஞ்சம் நசுங்கட்டும்
தள்ளி போடாதே
தாப்பா போடாதே
♪
உன்னை பிள்ளை செய்வேன்
கொஞ்சம் தொல்லை செய்வேன்
கண்ணா ஆசைக்கு தோதாய்
ஆண்மை செய்வேன்
வீட்டில் வேலை செய்வேன்
தோட்டம் தூய்மை செய்வேன்
சந்தர்ப்பம் பார்த்து
தாய்மை செய்வேன்
அப்பாவி பூனை பாலை குடிக்குமா
பூனைக்கு பானை என்ன பொறுக்குமா
சற்றே தள்ளி போ
நேரம் சொல்லி போ
செவ்வந்தி பூவே
செவ்வான தீவே
தேனாகி வந்தாய் முன்னாலே
ஆணாகி போனேன் உன்னாலே
ஹா என் வீட்டுக்காரா
தென்னாட்டு தீரா
கண்ணாக வந்தாய் முன்னாலே
பெண்ணாகி போனேன் உன்னாலே
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri