சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே
சர்வ சிருஷ்டியைக் காப்பவர் நீரே
எங்கள் இதயத்தில் உம்மைப் போற்றுகிறோம்
என்றென்றும் பணிந்து தொழுவோம்
ஆ ஆ ஆ அல்லேலூயா (7) ஆமென்
வானம் பூமி ஒழிந்து போனாலும்
உம் வார்த்தைகளை என்றும் மாறாதே
இவ்வாழ்க்கை அழிந்து மறைந்துபோகும்
விசுவாசி என்றென்றும் நிலைப்பான்
எல்லா மனிதர்க்கும் ஆண்டவர் நீரே
எல்லா ஆசீர்வாதத்திற்கும் ஊற்றே
எங்கள் இதயத்தை உம்மிடம் படைக்கின்றோமே
ஏங்குகின்றோம் உம் ஆசீர்பெறவே
சபையின் அஸ்திபாரமும் நீரே
சபையின் தலையானவர் நீரே
சபையை போஷித்து பாதுகாத்தென்றுமே
சேர்த்துக்கொள்ள வருபவர் நீரே
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri