தேவ பிதா என்றன் மேய்ப்பன் அல்லோ, சிறுமை தாழ்ச்சி அடைகிலனே . அனுபல்லவி ஆவலதாய் எனைப் பைம்புன் மேல் அவர் மேயத் தமர் நீர் அருளுகின்றார்.- தேவ சரணங்கள் ஆத்துமந் தன்னைக் குளிரப்பண்ணி அடியேன் கால்களை நீதி என்னும் நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம் நிதமும் சுகமாய் நடத்துகின்றார். -தேவ சா நிழல் பள்ளத் திறங்கிடினும், சற்றும் தீங்குக் கண்டஞ்சேனே; வானபரன் என்னோடிருப்பார்; வளை தடியும் கோலுமே தேற்றும் .- தேவ பகைவர்க் கெதிரே ஒரு பந்தி பாங்காய் எனக்கென் றேற்படுத்திச் சுக தயிலம் கொண்டென் தலையைச் சுபமாய் அபிஷேகம் செய்குவார்,-தேவ ஆயுள் முழுவதும் என் பாத்ரம் அருளும் நலமுமாய் நிரம்பும், நேயன் வீட்டினில் சிறப்போடே, நெடு நாள் குடியாய் நிலைத்திருப்பேன் –தேவ