ஏலே கிறுக்குப் பயலே என் உசுர குடிச்ச மயிலே ஏலே கிறுக்குப் பயலே என் உசுர குடிச்ச மயிலே உன் உதட்டுல மணக்குற பீடி வாசம் உள்ளுக்குள்ள ஏதோ பண்ணுது நீ அழுக்கா கட்டுற வேட்டி என்னை கோழியாட்டம் கொத்தித் தின்னுது ஏலே கிறுக்குப் பயலே என் உசுர குடிச்ச மயிலே மீனை உரசி கொழம்பு வெச்சா முள்ளா குத்துது உன் நினைப்பு உன் மீசை முடியில மூக்குத்தி ஒண்ணு செஞ்சு தாடா நீ எனக்கு மீனை உரசி கொழம்பு வெச்சா முள்ளா குத்துது உன் நினைப்பு உன் மீசை முடியில மூக்குத்தி ஒண்ணு செஞ்சு தாடா நீ எனக்கு ரேஷன் கடையில உன் பேர்ல ரெண்டு கிலோ நானும் கேட்டேனே தண்ணிக்கொடத்தை உன்னால எங்கப்பன் காலுல போட்டேனே ரேஷன் கடையில உன் பேர்ல ரெண்டு கிலோ நானும் கேட்டேனே தண்ணிக்கொடத்தை உன்னால எங்கப்பன் காலுல போட்டேனே கொங்கனி போல நானும் கூட வந்திருவேன் நீ ஆசையா கேட்டீன்னா உசுரைக் கூட தந்திடுவேன் கொங்கனி போல நானும் கூட வந்திருவேன் நீ ஆசையா கேட்டீன்னா உசுரைக் கூட தந்திடுவேன் ஏலே கிறுக்குப் பயலே என் உசுர குடிச்ச மயிலே ஊருசனங்க ஏசிடுமுன்னு ஒதுங்கிப் போனா என்ன கணக்கு சர்க்கரை இல்லா காப்பியைப் போல சப்புன்னு கிடக்கு என் பொழப்பு ஊருசனங்க ஏசிடுமுன்னு ஒதுங்கிப் போனா என்ன கணக்கு சர்க்கரை இல்லா காப்பியைப் போல சப்புன்னு கிடக்கு என் பொழப்பு சைக்கிளில் ஏறி உட்கார்ந்து உன் மேல சாய ஆசை இருக்கு ரெண்டு பேரும் ஜோடியாக சினிமா பார்க்கனும் போல இருக்கு சைக்கிளில் ஏறி உட்கார்ந்து உன் மேல சாய ஆசை இருக்கு ரெண்டு பேரும் ஜோடியாக சினிமா பார்க்கனும் போல இருக்கு கையில தழும்பைப் போல நானும் ஒட்டிக்கிறேன் என் ஊருக்காரன் என்ன சொன்னாலும் உன்னை நானும் கட்டிக்குறேன் கையில தழும்பைப் போல நானும் ஒட்டிக்கிறேன் என் ஊருக்காரன் என்ன சொன்னாலும் உன்னை நானும் கட்டிக்குறேன் ஏலே கிறுக்குப் பயலே என் உசுர குடிச்ச மயிலே ஏலே கிறுக்குப் பயலே என் உசுர குடிச்ச மயிலே உன் உதட்டுல மணக்குற பீடி வாசம் உள்ளுக்குள்ள ஏதோ பண்ணுது நீ அழுக்கா கட்டுற வேட்டி என்னை கோழியாட்டம் கொத்தித் தின்னுது ஏலே கிறுக்கு பயலே என் உசுர குடிச்ச மயிலே