கண்ணான கண்ணே நீ கலங்காதடி கண்ணான கண்ணே கண்ணான கண்ணே நீ கலங்காதடி நீ கலங்காதடி யார் போனா யார் போனா என்ன யார் போனா யார் போனா யார் போனா என்ன நான் இருப்பேனடி நீ கலங்காதடி ஒரு கணம் ஒரு போதும் பிரியக் கூடாதே என் உயிரே என் உயிரே நீ அழுகக் கூடாதே நீ கண்ட கனவு எதுமே கலையக் கூடாதே நான் இருக்கும் நாள் வரைக்கும் நீ அழுகக் கூடாதே கிடைச்சதை இழக்குறதும் இழந்தது கிடைக்கிறதும் அதுக்குப் பழகுறதும் ஞாயம் தானடி குடுத்ததை எடுக்குறதும் வேற ஒன்ன குடுக்குறதும் நடந்ததை மறக்குறதும் வழக்கம் தானடி கண்ணான கண்ணே ... என் விரல் இடுக்குல உன் விரல் கெடக்கணும் நசுங்குற அளவுக்கு இறுக்கி நான் புடிக்கணும் நான் கண்ண தொறக்கையில் உன் முகம் தெரியனும் உசுருள்ள வரைக்குமே உனக்கு என்ன புடிக்கணும் கடல் அலைப் போல உன் கால் தொட்டு உரசி கடலுள்ள போறவன் நான் இல்லடி கடல் மண்ணப் போல உன் காலோட ஒட்டி கர தாண்டும் வர நான் இருப்பேனடி கண்ணான கண்ணே ... ஒரு கணம் ஒரு போதும் பிரியக் கூடாதே என் உயிரே என் உயிரே நீ அழுகக் கூடாதே நீ கண்ட கனவெதுமே கலையக் கூடாதே நான் இருக்கும் நாள் வரைக்கும் நீ அழுகக் கூடாதே நித்தம் நித்தம் நீ ஒடஞ்சா ஓட்ட வைக்க நான் இருக்கேன் கிட்ட வைச்சு பாத்துக்கவே உயிரே வாழுறேன்டி பெத்தவங்க போனா என்ன சத்தமில்லா உன் உலகில் நித்தம் ஒரு முத்தம் வைக்க நான் உயிரே வாழுறேன்டி