Kishore Kumar Hits

Satish Chakravarthy - Ponmalai Pozhudu şarkı sözleri

Sanatçı: Satish Chakravarthy

albüm: Leelai (Original Motion Picture Soundtrack)


பொன்மாலை பொழுது சிகப்பழகு
உன் கோபம் யாய் யாய் யாய் அழகோ அழகு
ஒரு ரோஜா பூவின் முள்ளும் துளி அழகு
உன் கண்ணில் கோவம் யாய் யாய் அழகோ அழகு
நீ காதல் சொல்லும் தமிழ் அழகு
நீ பாடும் கிள்ளை மொழி நூறழகு
என்னை நீ திட்டி திட்டி பேசும் கொச்சை தமிழோ
முடிவே இல்லா அழகோ அழகு யாய் யாய்
பொன்மாலை பொழுது சிகப்பழகு
உன் கோபம் யாய் யாய் யாய் அழகோ அழகு

உன் கூந்தல் காற்றில் ஆடிடும் பொழுது...
ஒரு springtime வாசம் பூத்திடும் அழகு... ஓ...
உன் கைகள் கூந்தல் கோதிட
பூக்கள் வாசம் car'ன் உள்ளே வீசிட
Summer time'ன் வெப்பத்தோடு நீயும்
கொதிப்பது ஒரு அழகு
நீ என்னை விட்டு தூரம் சென்றிட
சாலை எங்கும் கோடி இலைகள் உதிர்ந்திட
Autumn leaves'ம் உன்னை போலே சிகப்பாய் முறைப்பது ஒரு அழகு
Winter என்பது கொடுமை ஆனது உந்தன்
மௌனம் மூடுகின்ற பனி
அது கொஞ்சம் கொஞ்சம் உருக கூடாதா
பொன்மாலை பொழுது சிகப்பழகு
உன் கோபம் யாய் யாய் யாய் அழகோ அழகு
ஒரு ரோஜா பூவின் முள்ளும் துளி அழகு
உன் கண்ணில் கோவம் யாய் யாய் அழகோ அழகு

ஹா ஹா ஹா யாஹி ஏ யாஹி ஏ
யாஹி ஏ யாய் யாய் யாய்
ஓர் ஜன்னல் தோன்றும் பௌர்ணமி நிலவு
என் காதலி முகமோ அதை விட அழகு... ஓ...
வெண்மதியின் முகத்தை கண்டதும்
லட்சம் லட்சம் கவிஞர் கவிதை கொண்டதும்
கோடி மயில்கள் தள்ளி நின்று பாடி ரசித்தன அதன் அழகு
I love you என்று மூன்றே வார்த்தையில்
Haiku கவிதை நானும் சொன்ன வேளையில்
புன்னகைக்க ஜன்னலுக்கு
பின்னால் ஒளிந்தது ஒரு அழகு
நிலவும் இறங்கி பூமி வந்தது எந்தன்
தோளில் சாய்ந்து கொண்டு நின்றது
என்ன மாயம் அன்பே சொல்வாயா
பொன்மாலை பொழுது சிகப்பழகு
உன் வெட்கம் யாய் யாய் யாய் அழகோ அழகு (அழகு அழகு)
ஒரு ரோஜா பூவின் வாசம் துளி அழகு
உன் கண்ணில் ஆசை யாய் யாய் அழகோ அழகு (அழகு அழகு)
நீ காதல் சொல்லும் தமிழ் அழகு (அழகு)
நீ பாடும் கிள்ளை மொழி நூறழகு (நூறழகு)
என்னை நீ கொஞ்சி கொஞ்சி பேசும் கொச்சை தமிழோ
முடிவே இல்லா அழகோ அழகு யாய் யாய்
பொன்மாலை பொழுது சிகப்பழகு
உன் வெட்கம் யாய் யாய் யாய் அழகோ அழகு
சிகப்பழகு உன் வெட்கம் அழகு அழகு அழகு
சிகப்பழகு உன் வெட்கம் அழகு அழகு அழகு
சிகப்பழகு உன் வெட்கம் அழகு அழகு அழகு
சிகப்பழகு உன் வெட்கம் அழகு அழகு அழகு

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar