முழுமதி முழுமதி நிலவைக் கேளடி முழுவதும் முழுவதும் உண்மை தானடி காதலில் கரைந்தவர் என் போல் யாரடி ஹோ எத்தனை எத்தனை காதல் பார்த்தது எத்தனை எத்தனை கனவைக் கேட்டது என் போல் யாருமே இல்லை என்றது கேள் ஹோ நிலவுக்கு நிலவுக்கு இன்றே தெரிந்தது உயிருக்கு உயிருக்கு இன்றே புரிந்தது கனவுக்கு கனவுக்கு சிறகுகள் முளைக்குது நிலவினை உரசிட நினைவுகள் பறக்குது முழுமதி முழுமதி நிலவைக் கேளடி முழுவதும் முழுவதும் உண்மை தானடி காதலில் கரைந்தவர் என் போல் யாரடி ஹோ ♪ காவியக் காதல் ஆயிரம் கதைகள் பூமிக்கு சொன்னதடி நினைவுகளோடு வாழ்வது எந்தன் காதல் சொல்லுமடி உலகத்தில் சிறந்த இடம் அதை தேடி உந்தன் இதயம் வந்தேனே வந்தேனே உன் விரல் கோர்க்கும் நிமிடத்தில் எந்தன் தனிமைக்கு தனிமை தந்தேனே தந்தேனே முழுமதி முழுமதி நிலவைக் கேளடி முழுவதும் முழுவதும் உண்மை தானடி காதலில் கரைந்தவர் என் போல் யாரடி ஹோ ♪ நதியின் காதலை கரையிடம் வந்து அலைகள் சொன்னதடி மறுபடி மறுபடி அலையிடம் அதனை கரைகள் கேட்குதடி நதியினில் நீந்தும் நிலமிதை பார்த்து வெளிச்சத்தை அள்ளிச் சிந்தாதோ சிந்தாதோ காலையில் நமது காதலை ஏந்தி வானத்தை பிரிந்து செல்லாதோ செல்லாதோ முழுமதி முழுமதி நிலவைக் கேளடி முழுவதும் முழுவதும் உண்மை தானடி காதலில் கரைந்தவன் என் போல் யாரடி ஹோ நிலவுக்கு நிலவுக்கு இன்றே தெரிந்தது உயிருக்கு உயிருக்கு இன்றே புரிந்தது கனவுக்கு கனவுக்கு சிறகுகள் முளைக்குது நிலவினை உரசிட நினைவுகள் பறக்குது முழுமதி முழுமதி நிலவும் சொன்னது முழுவதும் முழுவதும் உண்மை தானது உன் போல் யாரும் இல்லை என்றது