Kishore Kumar Hits

Baradwaj - Irumanam Sernthu (From "Enge Enathu Kavithai") şarkı sözleri

Sanatçı: Baradwaj

albüm: Hits of Baradwaj


இருமனம் சேர்ந்து ஒரு மனம் ஆகும்
திருமணம் இன்று
இரு உயிர் சேர்ந்து ஒரு உயிர் ஆகும் ஒத்திகை இன்று
உனக்கென ஒரு சொந்தம்
இன்று தான் ஆரம்பம்
உனக்கதில் ஆனந்தம்
அதுவே என் இன்பம்
வாழ்க நீ வாழ்க நீ வாழ்க நீ
வாழ்க நீ வாழ்க நீ வாழ்க நீ
ஆ இறைவன் போடும் கட்டளை இது தான்
வாழ்க்கை என்னும் புத்தகம் இது தான்
வாழ்க நீ வாழ்க நீ வாழ்க நீ
வாழ்க நீ வாழ்க நீ வாழ்க நீ

யாருக்கு யார் என்று எழுதியதை இன்று தான்
உலகம் அறிந்து கொள்ளும்
பாதியில் வந்த சொந்தம் ஒன்றே
உயிர் விடும் வரையில் கூட வரும்
உறவுகளின் மத்தியில் இன்று
புது உறவு பூப்பதை கண்டு
காண வந்த கண்களில் ரெண்டு கரைகிறது காரணமின்று
வாழை மரம் தோரணம் கட்ட
வாழ்த்துக்களை வார்த்தையால் கொட்ட
வண்ண மலர் மாலைகள் கட்ட
வசந்தம் வரும் வாசலை தட்ட
ஆனந்த திருநாள்
ஆரம்பம் இன்று
வாழ்க வாழ்க வாழ்கவே
இருமனம் சேர்ந்து ஒரு மனம் ஆகும்
திருமணம் இன்று
இரு உயிர் சேர்ந்து ஒரு உயிர் ஆகும்
ஒத்திகை இன்று

ஆயிரம் கனவுகள் இதயத்திலே
அலைபாயும் சுகம்
தான் தெரியுதடா
தூரத்தில் இருந்த காதலியே
மனா வரை வந்தால் மகிழ்ச்சியடா
அன்னைக்கொரு மாற்று என்று
மனைவிக்கொரு பெரும் உண்டு
உனக்கும் அது பொருந்தும் என்று
உன்னை கொடு அவளுக்கென்று
உறவுகளின் உட்சவம் இன்று
உலகம் அதை வாழ்ததிடும் இன்று
கற்பு என்னும் அர்ச்சனை கொண்டு
வாழ்த்துகிறேன் நானும் இன்று
ஆயுளை கூட பரிசாய் தருவேன்
வாழ்க வாழ்க வாழ்கவே
இருமனம் சேர்ந்து ஒரு மனம் ஆகும்
திருமணம் இன்று
இரு உயிர் சேர்ந்து ஒரு உயிர் ஆகும் ஒத்திகை இன்று
உனக்கென ஒரு சொந்தம்
இன்று தான் ஆரம்பம்
உனக்கதில் ஆனந்தம்
அதுவே என் இன்பம்
வாழ்க நீ வாழ்க நீ வாழ்க நீ
வாழ்க நீ வாழ்க நீ வாழ்க நீ
ஆ இறைவன் போடும் கட்டளை இது தான்
வாழ்க்கை என்னும் புத்தகம் இது தான்
வாழ்க நீ வாழ்க நீ வாழ்க நீ
வாழ்க நீ வாழ்க நீ வாழ்க நீ

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar