உன்னை தினம் நினைக்கிறேன் எந்தன் திசை மறந்து தொலைதூரம் நானே தேடித்தேடி அலைந்தேனடா என்னை நீங்காதே நீ தொட்டுவிடும் தூரம் நீ இருந்தும் கட்டிக்கொள்ள முடியவில்லை விட்டு விட நினைக்கும் என்னுயிரும் எனக்கு சொந்தமில்லை ♪ தொலைவினில் தெரியும் கானலிலும் உந்தன் விம்பம் தேடினேன் யாருமில்லா சாலை நீயுமில்லா மாலை தனிமையில் வாடினேன் உன்னோடு நானும் சேர்ந்தாலே என்னாயுள் நீளும் என்னவனே தொட்டுவிடும் தூரம் நீ இருந்தும் கட்டிக்கொள்ள முடியவில்லை விட்டு விட நினைக்கும் என்னுயிரும் எனக்கு சொந்தமில்லை ♪ விழியினில் வழியும் கண்ணீரும் பிரிவின் வலி சொல்லுமே ஓடிவரும் நெஞ்சம் உன்னிடமே தஞ்சம் உயிரிலே எழுதினேன் உன்னோடு நானும் சேர்ந்தாலே என்னாயுள் நீளும் என்னவனே தொட்டுவிடும் தூரம் நீ இருந்தும் கட்டிக்கொள்ள முடியவில்லை விட்டு விட நினைக்கும் என்னுயிரும் எனக்கு சொந்தமில்லை உன்னை தினம் நினைக்கிறேன் எந்தன் திசை மறந்து தொலைதூரம் நானே தேடித்தேடி அலைந்தேனடா என்னை நீங்காதே நீ தொட்டுவிடும் தூரம் நீ இருந்தும் கட்டிக்கொள்ள முடியவில்லை விட்டு விட நினைக்கும் என்னுயிரும் எனக்கு சொந்தமில்லை