ஒரு தேவதை வந்து விட்டாள் உன்னை தேடியே வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே ♪ ஒரு தேவதை வந்து விட்டாள் என்னை தேடியே வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே நூறு நூறு ஜென்மம் வாழ்ந்திருக்க நூலில் பூவை போல சேர்ந்திருக்க தீபம் ஏற்றி வைத்து தேரிழுக்க சேலை சோலை கொண்டு சேர்ந்தணைக்க புன்னகையில் பூ பறிக்க ஒரு தேவதை வந்து விட்டாள் என்னை தேடியே வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே ♪ பூக்கும் செடியை எல்லாம் சிரிக்கும் பூவை எல்லாம் உன் பெயரை கேட்டிருந்தேன் எட்டு திசையும் சேர்த்து ஒற்றை திசையை மாற்றி உன் வரவை பார்த்திருந்தேன் கண்ணுக்குள் கண்ணுக்குள் உந்தன் பிம்பம் நெஞ்சுக்குள் நெஞ்சுக்குள் உந்தன் சந்தம் உள்ளத்தை உள்ளத்தை அள்ளி தந்தேன் உன்னிடம் உன்னிடம் என்னை தந்தேன் என் நிழலில் நீ நடக்க என் உயிரில் உன்னை வைத்தேன் ஒரு தேவதை வந்து விட்டாள் என்னை தேடியே வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே ♪ ரோஜா செடிகள் நட்டு உயிரை நீராய் விட்டு கூந்தலுக்கு பூ வளர்ப்பேன் வெட்கம் வீசும் ரோஜா வெளியில் வரும் நேரத்தில் வெயிலுக்கு தடை விதிப்பேன் அன்பே உன் பாதங்கள் நோகும் என்று அங்கங்கே பூவாலே பாதை செய்வேன் கண்ணே உன் வாசத்தில் நான் இருக்க காற்றிடம் யோசனை கேட்டு வைப்பேன் என் நிழலில் நீ நடக்க என் உயிரில் உன்னை வைத்தேன் ஒரு தேவதை வந்து விட்டாள் உன்னை தேடியே வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே நூறு நூறு ஜென்மம் வாழ்ந்திருக்க நூலில் பூவை போல சேர்ந்திருக்க தீபம் ஏற்றி வைத்து தேரிழுக்க சேலை சோலை கொண்டு சேர்ந்தணைக்க புன்னகையில் பூ பறிக்க