பூந்தேனில் கலந்து பொன் வண்டு எழுந்து சங்கீதம் படிப்பதென்ன தள்ளாடி நடப்பதென்ன பூந்தேனில் கலந்து பொன் வண்டு எழுந்து சங்கீதம் படிப்பதென்ன தள்ளாடி நடப்பதென்ன ♪ பொன் வண்ண ஏணி ஒன்று செய்து கொடுத்தான் எனை வளர்த்து விட்டான் போகாத மேல்படிப்புக்கு போக வைத்தான் கலை மலர செய்தான் அவன் நான் வாழ வேண்டும் என்று நாள்தோறும் நினைத்தான் நன்றாக ஓர் இடம் தேடி தந்தான் அவன் என்னைத்தான் தினம் நினைத்தான் நெஞ்சில் என்னோடு கலந்து விட்டான் பூந்தேனில் கலந்து பொன் வண்டு எழுந்து சங்கீதம் படிப்பதென்ன தள்ளாடி நடப்பதென்ன ♪ மாணிக்க மூக்குத்தி சூட்டி விட்டான் நான் மயங்கி நின்றேன் மீனாட்சி போல் என்னை ஜொலிக்க வைத்தான் மனம் மலர்ந்து நின்றேன் பேர் கொண்ட காதலியை ஊர்கோல சிலையால் சீராக திருமகள் ஆக்கி வைத்தான் அவன் எனக்குள் தந்த மயக்கம் அதை எப்போதும் நினைக்க வைத்தான் பூந்தேனில் கலந்து பொன் வண்டு எழுந்து சங்கீதம் படிப்பதென்ன தள்ளாடி நடப்பதென்ன ♪ கண்மீது மை எடுத்து தீட்ட சொன்னான் நான் தீட்டி கொண்டேன் தனக்காக பாட்டொன்று பாட சொன்னான் நான் பாடி வைத்தேன் செந்தூர இதழ் தனில் ஏதேதோ எழுதி சிங்காரம் செய்தது புரியவில்லை அதில் எனக்கும் ஒரு மயக்கம் அது ஏன் என்று தெரியவில்லை பூந்தேனில் கலந்து பொன் வண்டு எழுந்து சங்கீதம் படிப்பதென்ன தள்ளாடி நடப்பதென்ன அஹஹஹஹா