Kishore Kumar Hits

Sirpy - Azagiya Lail şarkı sözleri

Sanatçı: Sirpy

albüm: Ullathai Alli Thaa


அழகிய லைலா அவள் இவளது style'ah
சந்தன வெயிலா இவள் மன்மத புயலா
அடடா பூவின் மாநாடா ஓஹோ...
அழகுக்கு இவள்தான் தாய் நாடா
அழகிய லைலா அவள் இவளது style'ah
சந்தன வெயிலா இவள் மன்மத புயலா
அடடா பூவின் மாநாடா ஓஹோ...
அழகுக்கு இவள்தான் தாய் நாடா

ஏ சிறகென விரித்தாள் கூந்தலை இங்கே
சூரியன் நிலவாய் ஆனது அங்கே
என் மனம் இன்று போனது எங்கே
மன்மதனே உன் ரதி எங்கே
கன்னத்தை தொட்டால் சந்தனம் ஒட்டும்
வெட்கத்தை தொட்டால் குங்குமம் கொட்டும்
புன்னகை பட்டால் மல்லிகை மொட்டும்
பார்த்தால் பருவம் மூச்சு முட்டும்
காலடி ஓசைகள் கம்பனை கேட்டது அம்மம்மா
Picasso'வின் ஓவியம் ஒன்று
Beethoven'in symphony ஒன்று
பெண்ணாய் மாறியதோ
அந்தப்புரத்து மகராணி ஓஹோ...
அந்தப்புரத்து மகராணி

அழகிய லைலா அவள் இவளது style'ah
சந்தன வெயிலா இவள் மன்மத புயலா
அடடா பூவின் மாநாடா ஓஹோ...
அழகுக்கு இவள்தான் தாய் நாடா

உயிருக்குள் மின்னல்கள் அடித்தது என்ன
தாகங்கள் என்னை குடித்தது என்ன
அழகினில் என்னை வளைத்தது என்ன
இதயம் கொள்ளை போனதென்ன
ரகசியமாய் இவள் இளமையை ரசித்தேன்
கவிதைகள் எழுதி மனசுக்குள் படித்தேன்
கனவுகள் அடுக்கி காலையில் கலைத்தேன்
தினம் தினம் இவளை யோசித்தேன்
வாலிப குறும்புகள் ஜாதிகள்
சொல்லுது ஐயய்யோ
பூக்கள் அவளை பார்த்து பார்த்து
Autograph கேட்டு கேட்டு
கைகள் நீட்டியதோ
அந்தப்புரத்து மகராணி ஓஹோ...
அந்தப்புரத்து மகராணி
அழகிய லைலா அவள் இவளது style'ah
சந்தன வெயிலா இவள் மன்மத புயலா
அடடா பூவின் மாநாடா ஓஹோ...
அழகுக்கு இவள்தான் தாய் நாடா

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar