Kishore Kumar Hits

Deva - Anbe Vaa Arugile (Male) (From "Kili Petchu Ketkava") şarkı sözleri

Sanatçı: Deva

albüm: Emotions By K J Jesudas (Original Motion Picture Soundtrack)


அன்பே வா அருகிலே
என் வாசல் வழியிலே
உல்லாச மாளிகை மாளிகை
எங்கே என் தேவதை தேவதை
நீ தானே வேண்டும் என்று ஏங்கினேன்
நாள் தோறும் முள்ளின் மீது தூங்கினேன்
அன்பே வா அருகிலே
என் வாசல் வழியிலே

இத்தனை நாள் வாய் மொழிந்த
சித்திரமே இப்பொழுது
மௌனம் ஏன் தானோ
மின்னலென மின்னி விட்டு
கண் மறைவாய் சென்று விட்ட
மாயம் நீ தானோ
உன்னால் வந்த காதல்
உன்னால் தானே வாழும்
என்னை நீங்கி போனால்
உன்னை சேரும் பாவம்
எனக்கொரு அடைக்கலம் வழங்குமோ
உன் இதயமே
அன்பே வா அருகிலே
என் வாசல் வழியிலே
உல்லாச மாளிகை மாளிகை
எங்கே என் தேவதை தேவதை
நீ தானே வேண்டும் என்று ஏங்கினேன்
அன்பே வா அருகிலே
என் வாசல் வழியிலே

உள்ளத்துக்குள் உள்ளிருந்து
மெல்ல மெல்ல கொல்லுவது
காதல் நோய் தானோ
வைகை என பொய்கை என
மையலிலே எண்ணியது
கானல் நீர் தானோ
என்னை நீயும் தூண்ட
எண்ணக் கோலம் போட்டேன்
மீண்டும் கோலம் போட
உன்னைத் தானே கேட்டேன்
எனக்கொரு அடைக்கலம் வழங்குமோ
உன் இதயமே
அன்பே வா அருகிலே
என் வாசல் வழியிலே
உல்லாச மாளிகை மாளிகை
எங்கே என் தேவதை தேவதை
நீ தானே வேண்டும் என்று ஏங்கினேன்
நாள் தோறும் முள்ளின் மீது தூங்கினேன்
அன்பே வா அருகிலே
என் வாசல் வழியிலே

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar