Kishore Kumar Hits

Deva - Kannale Kadhal Kavithai (From "Athma") şarkı sözleri

Sanatçı: Deva

albüm: Emotions By K J Jesudas (Original Motion Picture Soundtrack)


கண்ணாலே காதல் கவிதை சொன்னாலே எனக்காக
கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக
கல்லூரி வந்து போகும் வானவில் நீதான்
அழகே நீ எங்கே என் பார்வை அங்கே
கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக
கண்ணாலே காதல் கவிதை சொன்னாலே எனக்காக
கடற்கரை தன்னில் நீயும் நானும் உலவும் பொழுது
பறவையை போல் கானம் பாடி பறக்கும் மனது
இங்கு பாய்வது புது வெள்ளமே
இணை சேர்ந்தது இரு உள்ளமே
குளிர் வாடை தான் செந்தளிரிலே
இந்த வாலிபம் தன் துணையிலே
இளம் மேனி உன் வசமோ?
கண்ணாலே காதல் கவிதை சொன்னாலே எனக்காக
கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக
உனக்கென மணி வாசல் போலே மனதை திறந்தேன்
மனந்திற்குள் ஒரு ஊஞ்சல் ஆடி உலகை மறந்தேன்
வலையோசைகள் உன் வரவைக் கண்டு
இசை கூட்டிடும் என் தலைவன் என்று
நெடுங் காலங்கள் நம் உறவை கண்டு
நம்மை வாழ்த்திட நல் இதயம் உண்டு
இன்ப ஊர்வலம் இதுவோ?
கண்ணாலே காதல் கவிதை சொன்னாலே எனக்காக
கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக
கல்லூரி வந்து போகும் வானவில் நீதான்
அழகே நீ எங்கே என் பார்வை அங்கே
கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக
கண்ணாலே காதல் கவிதை சொன்னாலே எனக்காக

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar