Kishore Kumar Hits

Sundaramurthy K.S. - Naanum şarkı sözleri

Sanatçı: Sundaramurthy K.S.

albüm: Navarasa (Original Motion Picture Soundtrack)


மயக்கும் மழலை மொழியோ
அவிழும் அருவி ஒலியோ
குவியும் குயிலின் குரலோ
தேயும் தேயும் இவள் முன்
குளம்பி கிளப்பும் மணமோ
புதினம் பிரிக்கும் மணமோ
துளசி இலையின் மணமோ
தேயும் தேயும் இவள் முன்
ஏன் அதை நான் உணரவில்லை ஏன்
ஏன் உணர்ந்தும் திருந்தவில்லை
நாணும் நேரம் இது
நானும் நாணும் நேரம் இது
ஓர் ஆணின் நாணமிது அன்பே
நாணும் நேரம் இது
நானும் நாணும் நேரம் இது
என் வேறு கோணம் இது அன்பே

இசை தேடி நீ வந்தாய்
இசை என்றென்னில் ஆனாய்
இசையின்றி என்னாவேன்
இசையில்லா மண்ணாவேன்
திருந்தும் வாய்ப்பொன்று தந்தாய்
மறந்தும் மீண்டும் செய்யேன்
செல்லாதே நீ
வா வா என்னிசையே இசையே
ஒ ஒ ஒ ஒ ஒ ஒஹோ ஹோ
ஒ ஒ ஒ ஒ ஒ ஒஹோ ஹோ
ஒ ஒ ஒ ஒ ஒ ஒஹோ ஹோ அன்பே
நாணும் நேரம் இது
நானும் நாணும் நேரம் இது
என் வேறு கோணம் இது அன்பே
டு டு டு டு டு டு டு
டு டு டு டு டு டு டு
ஒ ஒ ஒ ஒ ஒ ஒஹோ ஹோ
ஒ ஒ ஒ ஒ ஒ ஒஹோ ஹோ

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar