வானம் தாயாக பூமி நானாக வாழும் நாளெல்லாம் யாவும் நீயாக தகப்பன் சாமி நீயடி இரு விழியால் வரம் தருவாய் கலங்கமில்லா தெய்வமே கலங்குவதேன் எழுதி பார்க்க வண்ணமில்லை உழுது பார்க்க மண்ணுமில்லை அழுது பார்க்க எண்ணமில்லை அதற்கு யாரோ ஆரிராரோ எழுதி பார்க்க வண்ணமில்லை உழுது பார்க்க மண்ணுமில்லை அழுது பார்க்க எண்ணமில்லை அதற்கு யாரோ ஆரிராரோ ♪ நாடோடடி ஆனாலும் வழித்துணை இவளடா நான் இடரி வீழந்தாலும் நடை வண்டி இவளடா கிளியின் தோள்களில் மிருகம் சாய்ந்திட பயந்து போனதே பறவை ஜாதி இதற்கு காரணம் அறிவேன் யாரிடம் உலகம் மாறிடுமோ கடலும் நீரும் மலையும் தேனும் இரண்டை போல இவளும் நானும் இதற்கு மேல என்ன வேணும் ம்ஹூம் ம்ஹூம் அப்பா எழுதி பார்க்க வண்ணமில்லை உழுது பார்க்க மண்ணுமில்லை அழுது பார்க்க எண்ணமில்லை அதற்கு யாரோ ஆரிராரோ ♪ வானம் தாயாக பூமி நானாக வாழும் நாளெல்லாம் யாவும் நீயாக தகப்பன் சாமி நீயடி இரு விழியால் வரம் தருவாய் கலங்கமில்லா தெய்வமே கலங்குவதேன்