Kishore Kumar Hits

A.R. Rahman - Nee Singam Dhan (From "Pathu Thala") şarkı sözleri

Sanatçı: A.R. Rahman

albüm: Best of A.R. Rahman (Tamil)


சுற்றி நின்று ஊரே பார்க்க
களம் காண்பான்!
புன்னகையில் சேனை வாழ
ரணம் காண்பான்!
உன் பேரை சாய்க்க
பல யானைகள் சேர்ந்த போதே
நீ சிங்கம் தான்!
அந்த ஆகாயம் போதாத
பறவை ஒன்று
நதி கண்ணாடி பார்த்து
மனம் நிறைந்தது இன்று
கடலால் தீராத
எறும்பின் தாகங்கள்
இலையின் மேலாடும்
பனித்துளி தீர்க்கும்
தீயை நீ பகிர்ந்தாலும்
ரெண்டாய் வாழும்
இவனும் அந்த தீ போலத்தான்!
அந்த ஆகாயம் போதாத
பறவை ஒன்று
நதி கண்ணாடி பார்த்து
மனம் நிறைந்தது இன்று
கடலால் தீராத
எறும்பின் தாகங்கள்
இலையின் மேலாடும்
பனித்துளி தீர்க்கும்

ஹே, பார் என்ற தேருக்குள் ஊர்கோலங்கள்
தேர் யார் சொந்தம் ஆனால் தான் என்ன சொல்!
மகளை காத்து மான் குட்டி போலே
சுயம் இன்றி வாழ்வான் மண் மேலே
உன் நிலத்தினில் மலரை நீயும்
சிறையினில் இடலாம்
அதன் நறுமணம் எல்லையை கடந்து வீசும்
ஓ-ஓஹோ-ஓ-ஓஹோஹோ
ஓ-ஓஹோ-ஓ-ஓஹோஹோ
ஓ-ஓஹோ-ஓ-ஓ-ஓஹோ-ஓ
ஓ-ஓஹோ-ஓ-ஓ
அந்த ஆகாயம் போதாத
பறவை ஒன்று
நதி கண்ணாடி பார்த்து
மனம் நிறைந்தது இன்று
கடலால் தீராத
எறும்பின் தாகங்கள்
இலையின் மேலாடும்
பனித்துளி தீர்க்கும்

உறவோ யாரென
நீயும் கேட்கலாம்
ஊரெல்லாம் சொந்தம் கொண்டாடும்
சிலரின் பேறத்தான் சரிதம் ஆழமாய்
காலங்கள் போனாலும் பேசும்
அது யாரென்றே முடிவு
இங்கு யாரோடும் இல்லை
அது நீயென்று நினைத்தால்
நீ இறைவன் கை பிள்ளை
புகழ் வந்தாலும் அதுகூட கடன் தான் என்று
அவன் கிரீடத்தை தந்தானே ஞானம் என்பேன்
நிலவின் மேல் ஏறி விளக்கு தான் ஆடும்
விலைகள் கேட்காமல் தினம் ஒளி வீசும்
தீயை நீ பகிர்ந்தாலும்
ரெண்டாய் வாழும்
இவனும் அந்த தீ போலத்தான்!

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar