Kishore Kumar Hits

Amitabh Bachchan - Suvaasamaagum Thaesame şarkı sözleri

Sanatçı: Amitabh Bachchan

albüm: Syeraa Narasimha Reddy


சுவாசமாகும் தேசமே(சுவாசமாகும் தேசமே)
நெஞ்சின் ஓசையாகும் தேசமே(ஓசையாகும் தேசமே)
இரத்தமாகிப் பாயும் தேசமே
யாக்கை யாவும் மண்ணின் வாசமே
பேச்சென்றாகும் தேசமே(பேச்சென்றாகும் தேசமே)
வாளின் வீச்சென்றாகும் தேசமே(வீச்சென்றாகும் தேசமே)
பாதச் சுவடென்றாகும் தேசமே
காலம் தாண்டி உந்தன் மாட்சி பேசுமே
தேசமே நீயடா
எம் நாளை நீயடா(தேசமே நீயடா)
தேசமே நீயடா
எம் நாளை நீயடா(எம் நாளை நீயடா)

பிறந்தெழுந்து நின்றனை
உன் வேர்களைப் பிரிந்தனை(வேர்களைப் பிரிந்தனை)
உன் பாறை மார்பில் தீட்டினை
வாளினை
போராட்டம் என்னும் காட்டிலே(போராட்டம் என்னும் காட்டிலே)
ஓர் சிங்கம் என்று ஆகினை(சிங்கம் என்று ஆகினை)
எம் நெஞ்சம் எங்கும் தீயினை
ஏற்றினை
உனது வாழ்க்கையை
எமக்கு தந்தனை
பதாகை என்று காற்றில் ஆடினை
தேசமே நீயடா
எம் நாளை நீயடா(தேசமே நீயடா)
தேசமே நீயடா
எம் நாளை நீயடா(எம் நாளை நீயடா)
தேசமே நீயடா
எம் நாளை நீயடா(தேசமே நீயடா)
தேசமே நீயடா
எம் நாளை நீயடா

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar