மண்ணெல்லாம் கண்களாய் நீ பார்க்கிறாய் என் காதல் பாலையே நீ பூக்கிறாய் என் மார்பில் மண் புயலாய் என் கண்ணிலே ஓர் கயலாய் செந்திராட்சைக் கள்ளென்றாகி போதையாகி ரத்தத்தை நிறங்கூட்டினாய் என் காதலும் உன் போதையும் ஓர் தீண்டலிலே ஒன்றாகுதே உன் தேகமும் என் மோகமும் ஓரு முத்தத்திலே ஒன்றாகுதே என் ஈரமும் உன் வீரமும் ஓரு சேரலிலே ஒன்றாகுதே உன் தீப்பொறி என் ராத்திரி மெய் கூடும் நொடி ஒன்றாகுதே தண்ணீரிலே இரு பாம்புகள் புணரோவியம் வரைகின்றன சில நூறு மீன்களோ கண் விரித்துதான் காதல் தீயில் நனைந்தன பாவையைப் பார்த்து மென்கொல்கிறாயே உன் பேச்சு ஏனோ கொல்லாமல் கொல்லுதோ கால் இடை நெஞ்சில் கண் மேய்கிறாயே விரகத்தை ஏனோ தூண்டாமல் தூண்டுதோ உனதருகே என் மனமே எரிதழலாய் சுகந்தருமே பேராசையோடு கேட்கின்றேன் என் அன்பே உயிராய் எனில் நீ வேண்டுமே என் காதலும் உன் போதையும் ஓர் தீண்டலிலே ஒன்றாகுதே உன் தேகமும் என் மோகமும் ஓரு முத்தத்திலே ஒன்றாகுதே உன் தீப்பொறி என் ராத்திரி மெய் கூடும் நொடி ஒன்றாகுதே