விந்தை கிறிஸ்தேசு ராஜா! உந்தன் சிலுவையென் மேன்மை (2) சுந்தரமிகும் இந்த பூவில் எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் — விந்தை திரண்ட ஆஸ்தி, உயர்ந்த கல்வி செல்வாக்குகள் எனக்கிருப்பினும் குருசை நோக்கிப் பார்க்க எனக்கு உரிய பெருமைகள் யாவும் அற்பமே — விந்தை உம் குருசே ஆசிக்கெல்லாம் ஊற்றாம் வற்றா ஜீவ நதியாம் துங்க ரத்த ஊற்றில் மூழ்கித் தூய்மையடைந்தே மேன்மையாகினேன் — விந்தை சென்னி, விலா, கை, கானின்று சிந்துதோ துயரோடன்பு, மன்னா இதைப் போன்ற காட்சி எந்நாளிலுமே எங்கும் காணேன் — விந்தை இந்த விந்தை அன்புக்கீடாய் என்ன காணிக்கை ஈந்திடுவேன் எந்த அரும் பொருள் ஈடாகும்? என்னை முற்றிலும் உமக்களிக்கிறேன் — விந்தை