கரைபுரண்டு ஓடும் ஆறாய் நெஞ்சமாவதேன் விழி இரண்டும் என்னுள் பாய்ந்தே மீன்களாவதேன் நுரைகள் யாவும் நிலவாக என் மேல் வீழும் வானாய் ஆனாய் மண் மேல் பூக்கும் தீயாய் ஆனாய் நாவில் தாவும் மானாய் போதை தூவும் தேனாய் ஆனாய் கரைகளாய் இரண்டாகிடும் மனம் அலைகளாய் எழுந்தே விழும் கணம் அதன் மேல் போகும் படகானாய் ♪ எண்ணம் சொல்லும் சொல்லைக் கேட்டு உந்தன் தேகம் வளைவது போல் உந்தன் கண்ணின் சொல்லைக் கேட்டு எந்தன் வாழ்க்கை வளைகிறதோ ரெண்டு வேறு நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து இணைவது போல் உந்தன் நெஞ்சும் எந்தன் நெஞ்சும் ஒப்பந்தம் போடுதோ நேற்றும் பூங்காற்றும் வெண்ணிலாக் கீற்றும் யாவும் வேறாகத் தோன்றுதோ மின்னும் பொன்விண்ணும் பின்பு என் மண்ணும் கண்முன் காணாமல் போகுதோ மாற்றுகின்றாய் (மாற்றுகின்றாய்) மாறுகின்றேன் (மாறுகின்றேன்) போதுமா காதலே (போதுமா காதலே)
மடை திறந்து பாயும் நீராய் காதல் காண்கிறேன் சிறகிரண்டும் என்னுள் தோன்றி வானில் பாய்கிறேன் முகில்கள் யாவும் நிறம் மாற (முகில்கள் யாவும் நிறம் மாற) எல்லை இல்லா வானாய் ஆனாய் என்னை கொஞ்சும் காற்றாய் ஆனாய் நாணம் கொள்ளும் ஆணாய் (ஓ-ஓ) எந்தன் நாவில் தேனாய் ஆனாய் (ஆனாய்) முதலா முடிவா இடமா வலமா-ஹோ-ஒ தொடவா விடவா இறைவா-ஹோ