Kishore Kumar Hits

Sam C.S. - Appa En Appa - From "Thiruvin Kural" şarkı sözleri

Sanatçı: Sam C.S.

albüm: Appa En Appa (From "Thiruvin Kural")


மொழியே மொழியே, தொலைந்தாலும்
இதயம் இதயம் உலையாதே
உலகின் பொருள்கள், மறைந்தாலும்
உணர்வின் அலைகள், மிதந்தாடும்
அப்பா, அப்பா

தாயே தாயே என்பார்கள்
தந்தையின் தியாகம் மறந்தார்கள்
பாலாய் தந்தவள் தாய் என்றால்
ஆளாய் செய்தவன் நீதானே
இந்த எலும்பும், இந்தச் சதையும்
உன்தன் வித்தில்தானே உருவாச்சு
என்னைக் கொடுத்து
உன் நினைவிடுப்பாய்
எனக்குள்ள சபதம் எழுந்தாச்சு
அப்பா என்பது மொத்த உலகம்
அப்பா இல்லையேல் செத்த நரகம்
அப்பா அன்புதான் தங்கச் சுரங்கம்
தங்கச் சுரங்கம்
அப்பா என் அப்பா
எனக்கு நாயகன்
அப்பா என் அப்பா
உனக்கு சேவகன்
அப்பா என் அப்பா
எனது காவலன்
அப்பா என் அப்பா
அப்பா என் அப்பா
எனக்கு நாயகன்
அப்பா என் அப்பா
உனக்கு சேவகன்
அப்பா என் அப்பா
எனது காவலன்
அப்பா அப்பா அப்பா

சொக்கத் தமிழ் மொழியில், சொற்கள் பல
வாய் மொழியில் வணங்க, வாய்ப்பே இல்ல
அப்பன் பேரச் சொல்லனும், மெல்ல மெல்ல
அத விட எனக்கு, ஆசையில்ல
தந்தையின் உள்ளங்கை தொடும்போது
சிங்கத்தின் பலம் சேரும்
தந்தைக்கு மகன்தான் உயிர் தந்தான்
தலைமுறை ஜெயம் காணும்
அப்பா என் அப்பா
எனக்கு நாயகன்
அப்பா என் அப்பா
உனக்கு சேவகன்
அப்பா என் அப்பா
எனது காவலன்
அப்பா அப்பா அப்பா

மலையே மடியில் சரிந்தாலும்
மனமே மனமே கலங்காதே
கடலே தலையில் கவிழ்ந்தாலும்
மகனே மகனே மயங்காதே, மயங்காதே
ஆண்டவனை தமிழன் அப்பன் என்பான்
அப்பனையும் தமிழன் ஆண்டவன் என்பான்
என்னோட கணக்கில் ரெண்டும் ஒன்னு
சொல்லப் போனால் கடவுள் ரெண்டாங்கண்ணு
பிறவி கொடுத்தாய் எதற்க்காக?
பேர் சொல்ல அத்ற்க்காக
பெறுங்கொண்ட தோல்கள் எதற்க்காக?
பகை வெல்ல அதற்க்காக
அப்பா என் அப்பா
எனக்கு நாயகன்
அப்பா என் அப்பா
உனக்கு சேவகன்
அப்பா என் அப்பா
எனது காவலன்
அப்பா என் அப்பா
அப்பா என் அப்பா
எனக்கு நாயகன்
அப்பா என் அப்பா
உனக்கு சேவகன்
அப்பா என் அப்பா
எனது காவலன்
அப்பா என் அப்பா

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar