வழி நெடுகிலும் மரங்கள்,
மரம் முழுவதும் பூக்கள்,
பூமுழுவதும் விதைகள்,
விதை முளைத்திடும் பூமி.
உன்னை அழைக்குது வா.வா.
உயிர் அழைக்குது வா...
உன்னை அழைக்குது வா...
வாழ்க்கை முழுவதும் அனுபவம்,
வாழ்ந்த்துபாருங்கள் சுகம் தரும்.
ஒவ்வொரு மனிதனும் உயர்ந்தவன்,
ஒவ்வொரு மனதிலும் ஒரு ரணம்.
எத்தனை பேரின் மூச்சுக்குள்,
எத்தனை பேரின் சுவாசங்கள்.
கடல்கள், கரைகள், மலைகளை,
கடந்த்திடும் உங்கள் மூச்சுக்கள்.
எத்தைபேரின் வேண்டுதல்,
உன் இத்தனை சிறிய வாழ்க்கைக்கு.
வாழ்க்கை முழுவதும் அனுபவம்,
வாழ்ந்த்துபாருங்கள் சுகம் தரும்.
யார் விததித்திட்ட நெல்மணி,
உன்பசி தீர்த்தது தெரியுமா?
பணம் தேடிடும் உலகினில்,
அந்த்தக்கடண் தீர்த்திட முடியுமா?
வண்ணத்துப்பூச்சியின் சிறகினில்,
வரைந்தவன் சொல்லும் இரகசியம்.
வாழ்ந்த்திடும் மனிதனின் முடிவினை,
ஒழித்துவைத்ததின் அதிசயம்.
இரு உயிர்களின் கலக்க்த்தை - உன்
ஒரு உயிரின்று உணருதே...
இரவில் தாயின் கண்களில்,
தேடிடும் கேள்விக்கு விடையென்ன?
இணர்வுக்கு மொழியில்லை, உணர்வதில் பிழையில்லை.
மறுபடி பிறப்பதற்கு, மண்ணிது இடமில்லை...
வாழ்க்கை முழுவதும் அனுபவம்,
வாழ்ந்த்துபாருங்கள் சுகம் தரும்.
ஒவ்வொரு மனிதனும் உயர்ந்தவன்,
ஒவ்வொரு மனதிலும் ஒரு ரணம்.
Поcмотреть все песни артиста