மண்ணெங்கும் சென்று தேடிப் பாரு விண்ணெங்கும் ஏறி தேடிப் பாரு ஒற்றை தேவதை யாரடா? சற்றே இவளைப் பாரடா ♪ மண்ணெங்கும் சென்று தேடிப் பாரு விண்ணெங்கும் ஏறி தேடிப் பாரு ஒற்றை தேவதை யாரடா? சற்றே இவளைப் பாரடா இவள் பார்வை மின்சாரம் இவள் வார்த்தை ரீங்காரம் இதழ் விரிக்கும் இவள் சிரிப்போ உன் வாழ்வின் வரம் இவள் பார்வை மின்சாரம் இவள் வார்த்தை ரீங்காரம் இதழ் விரிக்கும் இவள் சிரிப்போ உன் வாழ்வின் வரம் ♪ சுடிதாரின் தோட்டத்துக்குள் ஒற்றை தாவணி தமிழ் மட்டும் பேசும் இந்த தத்தை பாரு நீ தனியே வந்தாலும் இவள் அழகின் பேரணி அழகிகள் பூக்கும் உலகத்திலே ஒற்றை தேவதை யாரடா? சற்றே இவளை பாரடா இவள் பார்வை மின்சாரம் இவள் வார்த்தை ரீங்காரம் இதழ் விரிக்கும் இவள் சிரிப்போ உன் வாழ்வின் வரம் ♪ தன் போல் உள்ள தூரிகை ஒன்றில் வண்ணம் ஏழும் தீட்டிடுவாள் நெஞ்சில் கொண்ட ஆசைகள் எல்லாம் காகிதம் மேலே காட்டிடுவாள் நிலம் நீர் தீ வான் காற்றை எல்லாம் விரல் ஐந்தாலே கூட்டி வந்தாள் இவள் கை கோர்த்து இந்த பூமி நீ பார்த்தால் உன் வாழ்வில் வண்ணம் பூக்கும் இவள் பார்வை மின்சாரம் இவள் வார்த்தை ரீங்காரம் இதழ் விரிக்கும் இவள் சிரிப்போ உன் வாழ்வின் வரம் இவள் பார்வை மின்சாரம் இவள் வார்த்தை ரீங்காரம் இதழ் விரிக்கும் இவள் சிரிப்போ உன் வாழ்வின் வரம் (இவள் பார்வை மின்சாரம்) (இவள் வார்த்தை ரீங்காரம்) (இதழ் விரிக்கும் இவள் சிரிப்போ) (உன் வாழ்வின் வரம்)