Kishore Kumar Hits

Arivu - Monkeys With 5G şarkı sözleri

Sanatçı: Arivu

albüm: Monkeys With 5G


கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றி
Cell phone'ல் சோறாக்கும் செந்தமிழ் நாட்டிலே
பல் போன பாட்டியும் PUBG விளையாட
தாத்தாவின் YouTube'ல் Monkeys with 5G
வாலில்லாக் குரங்கு தன் விலங்கை அறுத்து குழந்தைக் கொடுத்து
உடைந்த நெருப்பு அது எரிந்து கரைந்து உலகம் படைத்து
வளர்ந்து வளர்ந்து தன் உடம்பு முழுக்க உணர்வு கலந்து
நடந்து நடந்து (நாடு நகரம் வீடு திறந்து)
கதவ சாத்து கிருமி கிருமி கிருமி காத்து
இலைய கோத்து குரங்கு போத்தி மனிதன் ஆச்சு ஆஹ்
உணவைப் பார்த்து அலைந்து காட்டில் பிரிஞ்சு போச்சு சிறிய கூட்டம்
பரவி பரவி உலகெல்லாம் உலவி கலவி குலவி
கண்டம் தோன்றுச்சே குடிகள் அங்கு சேர்ந்துச்சே
மொழியும் பின்னர் தோன்றுச்சே
கதைகள் சொல்லி மதங்கள் வந்து சேர்ந்துச்சே
அதிகாரங்கள் தோன்றுச்சே பிரிவும் வந்து சேர்ந்துச்சே
நவீனம் வந்து தொடர்பு கொள்ளும் கருவி ஒன்று தந்துச்சே
Monkeys with 5G
Now follow me on IG
But மூளைக்குள் ஜாதி
அது முத்திப்போன வியாதி
Monkeys with 5G
Now follow me on IG
But மூளைக்குள் ஜாதி
அது முத்திப்போன வியாதி

நதிக்கரை நாகரீகம் தொடுதிரைக்கு வந்தாச்சு
காப்பியம் காவியங்கள் Paytm'ல் உண்டாச்சு
முகநூல் நண்பர்கள் சந்திக்கும் tea கடை
Satellite காலத்தில் சாதி ஒரு சாக்கடை
உறையில் அம்பு உடலில் தெம்பு உணவை வேட்டை ஆடினோம்
இடியைக் கண்டு பயந்த பின்பு அலறி கூட்டம் கூடினோம்
அப்புறம் என்னாச்சு எல்லை கோடுகள் உண்டாச்சு
அண்டை நாடுகள் சண்டை போட்டிட வந்தாச்சு அது எல்லாமே வரலாறாச்சு
But அண்ணாச்சி
அறிவியல் இப்போ வந்தாச்சு
அடி மனதுல நிக்கும் பிரிவினை மட்டும் online வரையில வந்தாச்சு
ஐய்யையோ!
அது தப்பாச்சு
பல காதல் கதைகளும் cut ஆச்சு
பலியாடாய் பல பேர் செத்தாச்சு
அட நானா நீயா பிரிவில் நாடே குட்டிச்சுவராச்சு
இன்னும் மண்ணுல பேதம் எத்தன மேல கீழ எல்லாம் கற்பனை
தின்னும் சோத்துல உப்பைச் சேர்க்குர வீசும் காத்துல விஷமா ஏத்துற?
ஈரடி குறளில் ஏதுட சாதி கீழடி மணலில் தோன்றிய நீதி
ஆதியில் இங்கே பேதமும் இல்ல இதெல்லாம் சொன்னா hahaha
Monkeys with 5G
Now follow me on IG
But மூளைக்குள் ஜாதி
அது முத்திப்போன வியாதி
Monkeys with 5G
Now follow me on IG
But மூளைக்குள் ஜாதி
அது முத்திப்போன வியாதி
வியாதி வியாதி

நாஸ்தா கடையில WhatsApp'u
Fast'ah பரவுது hashtag'u
OTP வரும் auto'க்கு
Online delivery tea சாப்டு
பழகுது பாப்பா TikTok'u
தலவலிதாம்பா அப்பாக்கு
ஒரு மாசம் net pack'u
Family'குள்ள no talk'u
வா மா daddy's pittle princess'u
நம்ம feelings எல்லாம் status'u
Come-on இந்திய நாட்டின் nitizen
நம்ம புள்ளிங்க எல்லாம் netizen
பச்ச தண்ணி குச்சு புட்டு பாயாசம்
போல photo போடுவோம் hey awesome
Room முக்குள்ள குட்டி போட்ட நாயாட்டம்
Phone'ah தொட்டாலே கொலைக்குறான் என்னவருக்கும்?
மொக்க போட்டு மொக்க போட்டு கெட்டு போச்சு பரம்பரர
ஆசப்பட்டு காச போட்டு வாங்கிப்புட்டு பொலம்புற
வீட்டுக்குள்ள tower இல்ல அப்டின நான் வரல
ஆட்டி குள்ள don 24x7 இந்த போட்டிக்குள்ள தான்
மச்சி இன்னிக்கென்ன plan
வணக்கம் டா மாப்ல
நம்ப தம்பி வந்து like போடுவாப்ல
நல்ல புத்திமதி சொல்ல போறோம் rap'ல
அடிக்கடி ஒரு update கொடுக்குற android தலமுறை நண்பா கேளு
பல கொடுமைகள் இங்கே நடக்குது எல்லாம் புரிந்து நீ ஒன்றா சேரு
சக மனிதன சமமா பாத்திட பிரிவினையின் வலியோ போக்கிட
மறுபடியும் மனிதம் பூத்திட உருவானதுதான்டா இந்த
Monkeys with 5G
Now follow me on IG
But மூளைக்குள் ஜாதி
அது முத்திப்போன வியாதி
Monkeys with 5G
Now follow me on IG
But மூளைக்குள் ஜாதி
அது முத்திப்போன வியாதி
வியாதிதாங்க... நமக்குள்ள இருக்குற ஜாதி, மதம், வர்கம்
நீ பெருசா? நான் பெருசா? யாரிங்க இருக்கனும்? யாரிங்க இருக்கக்கூடாது?
அடையாளங்கள வெச்சு மனிதர்களைப் பிரிக்கிற வரைக்கும்
நம்ம எல்லாருமே monkeys தாங்க

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar