Kishore Kumar Hits

Arivu - Nagarodi (From "Jail") şarkı sözleri

Sanatçı: Arivu

albüm: Nagarodi (From "Jail")


ஊர விட்டு வேர விட்டு தூரம் போகுறோம்
வேறு யாரோ ஆகுறோம் பூமியே
நாதியத்து நியாயம் கேட்டு காயம் தாங்குறோம்
காலம் பூரா ஏங்குறோம் சாமியே
கூர மேல காகம் சேர
தூறும் எங்க சேரி வானம்
ஊர விட்டு ஓரம் போக
கூறும் இந்த நாடு நாளும்
மூச்சு நின்னு போச்சு என் மண்ணே
நகரோடி நாங்க நகரோடி
வெகுதூரம் போன நகரோடி
நகந்தோமே ஒரு இடம் தேடி தடம் தேடி
நகரோடி நாங்க நகரோடி
நதியோர கர நகரோடி
எழந்தோமே எங்க கடை வீதி எது மீதி
சொந்த மண்ணே நீ சொந்தம் இல்லை என்று சொல்ல
தூர தள்ள நாம் ஊரை விட்டு ஓரம் செல்ல
அடைத்து வைத்ததாரு நம்மை இந்த ஜெயிலிலே
முளைத்தெழுந்து வா உண்மையை உரக்க சொல்ல
நிலத்தை இழந்து புலம் பெயர்ந்த சனம்
தலைமுறைக்கும் இருக்கும் வலி கொடுத்த ரணம்
கல்லு கரட்டை உடைத்து நகர் அமைத்த இனம்
சதி விரட்ட விரட்ட உயிர் தவிக்க தினம்
பள்ளிக்கூடம் போக அன்னாடம் மூச்சு வாங்குதே
ஊரு போய் சேர என்னோட மூச்சு ஏங்குதே
கண்ட துண்டமாக என் வேரை கூறு போடுதே
வந்தவர்கள் வாழ நம்மை வந்தேறி ஆக்குதே
நகரோடி நாங்க நகரோடி
வெகுதூரம் போன நகரோடி
நகந்தோமே ஒரு இடம் தேடி தடம் தேடி
நகரோடி நாங்க நகரோடி
நதியோர கர நகரோடி
எழந்தோமே எங்க கடை வீதி எது மீதி
ஏஏஏ... ஏஏஏ...

கை வீசம்மா கை வீசு நீயும்
கையேந்த தான் வெச்சானே நாளும்
எட்டாக்கனி ஏழைக்கு நீதி தப்பாக்கு நீ
செத்த பின்ன சொர்க்கத்த சேர
கத்துக்கிட்டோம் மன்னித்து வாழ
செத்தாலுமே மண்ணை விட்டு தான் தராத நீ
கோட்டை எல்லாம் உன் வேர்வையால
சாப்பிடலாம் நீ மூணு வேளை
ரத்தம் மொத்தம் உறிஞ்சுக்கிட்டு குப்பையென வீச
இழக்க தான் உனக்கு தான்
எதுவுமே இல்லை இல்லை இனி
அடக்கி தான் ஒடுக்கிட்டான் ஒடச்சுட்டா
சிறை இல்லை இனி
கழுத்தை நெறித்தால் பலத்தைத் திரட்டு
உடைமை பறித்தால் உரிமை முழக்கு
இருட்டில் அடைத்தால் வெளிச்சம் கிளப்பு
இருக்கும் இடம் தான் நமக்கு உயிர் மூச்சு
ஓ ஊர விட்டு வேர விட்டு தூரம் போகுறோம்
வேறு யாரோ ஆகுறோம் பூமியே
நாதியத்து நியாயம் கேட்டு காயம் தாங்குறோம்
காலம் பூரா ஏங்குறோம் சாமியே
நகரோடி நாங்க நகரோடி
வெகுதூரம் போன நகரோடி
நகந்தோமே ஒரு இடம் தேடி தடம் தேடி
நகரோடி நாங்க நகரோடி
நதியோர கர நகரோடி
எழந்தோமே எங்க கடை வீதி எது மீதி
நகரோடி நாங்க நகரோடி
வெகுதூரம் போன நகரோடி
நகந்தோமே ஒரு இடம் தேடி தடம் தேடி
நகரோடி நாங்க நகரோடி
நதியோர கர நகரோடி
எழந்தோமே எங்க கடை வீதி எது மீதி

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar