Kishore Kumar Hits

Dhibu Ninan Thomas - Vaayadi Petha Pulla şarkı sözleri

Sanatçı: Dhibu Ninan Thomas

albüm: Kanaa (Original Motion Picture Soundtrack)


ஜிங்கு ஜிக்கா கு ஜிங்
ஜிங்கு ஜிக்கா கு ஜிங்
ஜிங்கு ஜிக்கா கு ஜிங் ஜிங்
வாயாடி பெத்த புள்ள
வரப்போறா நெல்லப் போல
யார் இவ
யார் இவ
கையில சுத்தற காத்தாடி
காத்துல ஆடுது கூத்தாடி
கண்ணுல கலரா கண்ணாடி
வம்புக்கு வந்து நிப்பா
யார் இவ
யார் இவ
யார் இந்த தேவதை
ஆனந்த பூமக
வால் மட்டும் இல்லையே
சேட்டைக்கெல்லாம் சொந்தக்காரி
யார் இந்த தேவதை
ஊர் கொஞ்சும் என் மக
நீ எந்தன் சாமிதான்
என்ன பெத்த சின்ன தாயே

அண்ண கிளியே
வண்ண குயிலே
குட்டி குறும்பே கட்டு கரும்பே
ஹான் ஹான்
செல்ல கிளியே
சின்ன சிலையே
எந்தன் நகலாய் பிறந்தவளா
ஹே
அப்பனுக்கு ஆஸ்தியும்
நான்தானே
ஆசையா வந்தே பொறந்தேனே
வானத்தில் பட்டமா
ஒசரக்க பறந்தேனே

எனக்கு இருக்கும்
கனவு எல்லாமே
நிலவுகிட்ட சொல்லி வைப்பேனே
வாசத்தில் விலையுற
வயல போல் இருப்பேனே
பொட்டப்புள்ள நெனப்புல
பசி எனக்கில்ல
இவ சிரிப்புல மயிலே
வானவில்லின் கொடைகுள்ள
வாழ பஞ்சமில்லை
இடி மின்னல் இவ கூட
பாட்டு கட்டி ஆடும்
யார் இந்த தேவதை
தானனான
தன்னான னான
வால் மட்டும் இல்லையே

ஆச மக என்ன செஞ்சாலும்
அதட்ட கூட ஆச படமாட்டேன்
என் மக ஆம்பள
பத்துக்கு சமம்தானே

செவுத்து மேல
பந்த போலத்தான்
சனியையும் சுழட்டி அடிப்பாளே
காளைய கூடவும்
அண்ணனா நெனைப்பாலே
எப்பவுமே செல்ல புள்ள
விளையாட்டு புள்ள
ரெட்டை சுழி புள்ள அழகே
பெத்தவங்க முகத்துல
ஒரு சிரிப்புல
ஆச பொண்ணு ஆயுள்தானே
கூடிக்கிட்டு போகும்
வாயாடி பெத்த புள்ள
வரப்போறா நெல்லப் போல
யார் இவ
யார் இவ
கையில சுத்தற காத்தாடி
காத்துல ஆடுது கூத்தாடி
கண்ணுல கலரா கண்ணாடி
வம்புக்கு வந்து நிப்பா
யார் இவ
யார் இவ
யார் இந்த தேவத
ஆனந்த பூமக
வால் மட்டும் இல்லையே
சேட்டைக்கெல்லாம் சொந்தக்காரி
யார் இந்த தேவத
ஊர் கொஞ்சும் என் மக
நீ எந்தன் சாமிதான்
என்ன பெத்த சின்ன தாயே

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar