(Amor)
(Love)
(My lust)
(Is love)
(நானும் நானா)
(நானும் நானா)
(நானும் நானா)
(நானா)
காதல் கண்மணி செந்தீயில் மின்மினி
யாக்கை தேடலின் அந்தாதி
மாயா மாலையில் தேயா தேடலில்
காயா காயுதே செந்தீயே
சாலையிலே ஊர் கடக்கும்
வழிப்போக்கன் நான் ஆனால்
பாதையிலே பூ தழுவும்
வான் தூறல் நீயாவாய்
♪
(என் முத்தங்கள் தீராதடா)
(இந்த காலங்கள் போதாதடா)
முத்தங்கள் மன்றாடும்
ஒரு மழலை ஆகிறேன்
மிச்சங்கள் கேட்டணைக்கும்
பெரு மழையாய் மாறினாய்
போர்வைக்குள் போய் களைந்து
நரம்பிழைகள் மீட்டுவோம்
கார் விழியும் இமை போலே
தினம் மஞ்சம் கூடுவோம்
பகலோடு இருள் கோர்க்கும் (இருள் கோர்க்கும்)
மாலை போல் (மாலை போல்)
ஆவோம் வா (ஆவோம் வா)
விடியாத (விடியாத)
நாள் ஒன்றில் (நாள் ஒன்றில்)
எல்லைகளாய் (எல்லைகளாய்)
இருப்போம் வா
♪
ஹே காதல் கண்மணி கை தீண்டும் மின்மினி
யாக்கை தேடலின் அந்தாதி
மாயா மாலையில் தேயா தேடலில்
காயா காயுதே செந்தீயே
சாலையிலே ஊர் கடக்கும்
வழிப்போக்கன் நான் ஆனால்
பாதையிலே பூ தழுவும்
வான் தூறல் நீயாவாய்
(Amor)
(Love)
(My lust)
(Is love)
(நானும் நானா)
(நானும் நானா)
(நானும் நானா)
(நானா)
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri