வானம் தோன்றாதோ, காலம் ஓடாதோ? மாற்றம் ஏதொன்றும் நம்மால் ஆகாதோ பாதை ஏதோ சீறும் காற்றோடு, தீரும் மூச்சோடு வீரம் நெஞ்சோடு நீயும் போராடு நாளை தேடு கண்ணுக்கே தெரியாமல் எதிரிக் கூட்டம் தாக்கும்போது அன்பே உன் கண்ணுக்குள் தூக்கம் ஏது கடவுள் நான் என்றாயே, கடைசி மூச்சை பார்த்துக்கொண்டு காப்பாற்ற வழியின்றி நிற்கும்போது புதைக்கவும் இடமும் இன்றி, எரிக்கவும் வழியுமின்றி மறைந்தவர் அனுப்பிவைத்தோம் ஓ-ஹோ-ஓ-ஓ இருளெல்லாம் விடிந்து தீரும் இதுவுமே கடந்து போகும் போராடவே கரம் இணைவோம் ஹோ-ஓ-ஓ-ஓ ♪ பாரம் மனம் எல்லாம் தேயும் கனவெல்லாம் மாற்றும் வழி எங்கே? போராட்டமும் நாமும் ஒன்றாக பிறந்தோம் அவ்வீரவும் எங்கே? நம் மீட்டறிவை இது தாழ்த்துவதோ நம் பட்டறிவை இது வீழ்த்துவதோ நம் அலட்சியத்தால் நாம் அழிவதுவோ நம் எதிரியிடம் நாம் முடிவதுவோ நம் முடிவதுவோ? புதைக்கவும் இடமும் இன்றி, எரிக்கவும் வழியுமின்றி மறைந்தவர் அனுப்பிவைத்தோம் ஓ-ஹோ-ஓ-ஓ இருளெல்லாம் விடிந்து தீரும் இதுவுமே கடந்து போகும் போராடவே கரம் இணைவோம் ஹோ-ஓ-ஓ ♪ முன்களப் போராடும் மருத்துவ படை எங்கே? வேடிக்கை பார்ப்போமா போரில் இணைவோமா சொல்லை கேட்போமா நம்மைக் காப்போமா கவசம் கொள்வோமா தொற்றைக் கொல்வோமா