நான் மண்ணென்னும் மாயத் தீ காயம் செய்யாதே உன் கால் தீண்ட என் தேகம் பாவம் பார்க்காதே தீரா வலிகள் நிதமும் தந்தாய் இமை நான் அசைத்தால் நீளுமோ வாழ்வே விசையும் திசையும் தசையும் நான் தான் ஒளியில் வழியும் துகளின் கால் பாகம் தானே நீ நகரும் நதியை நகரம் செய்தால் சுடரும் தணலும் கடலாய் உரு மாறி போகும் பார் ♪ ஒரு மண் தானே நான் என்று நீ எண்ண வேண்டாம் உன் பேராசை அதை கொண்டு நீ வீழ வேண்டாம் ♪ அணுவை பிளந்தாய் எனை நீ ஆள நொடி நான் சிலிர்த்தால் எங்கு நீ வாழ விசையும் திசையும் தசையும் நான் தான் ஒளியில் வழியும் துகளின் கால் பாகம் தானே நீ நகரும் நதியை நகரம் செய்தால் சுடரும் தணலும் கடலாய் உரு மாறி போகும் பார் ஊ ஊ