Kishore Kumar Hits

S.A. Rajkumar - Nenjam Orumurai şarkı sözleri

Sanatçı: S.A. Rajkumar

albüm: Vaseegara


நெஞ்சம் ஒரு முறை நீ என்றது
கண்கள் ஒரு நொடி பார் என்றது
நெஞ்சம் ஒரு முறை நீ என்றது
கண்கள் ஒரு நொடி பார் என்றது
ரெண்டு கரங்கலும் சேர் என்றது
உள்ளம் உனக்குத்தான் என்றது
சத்தமின்றி உதடுகளோ முத்தம் எனக்கு தா என்றது
உள்ளம் என்ற கதவுகளோ உள்ளே உன்னை வா என்றது

நீதான் நீதான் எந்தன் உள்ளம் திறந்து
உள்ளே உள்ளே வந்த முதல் வெளிச்சம்
நீதான் நீதான் எந்தன் உயிர் கலந்து
நெஞ்சை நெஞ்சை தொட்ட முதல் ஸ்பரிசம்
கன்னம் என்னும் தீ அணைப்பு துறையில்
உன் முத்தம்தானே பற்றி கொண்ட முதல் தீ
கிள்ளும்போது எந்தன் கையில் கிடைத்த
உன் விரல்தானே நானும் தொட்ட முதல் பூ
உன் பார்வைதானே எந்தன் நெஞ்சில் முதல் சலணம்
அன்பே என்றும் நீ அல்லவா
கண்ணால் பேசும் முதல் கவிதை
காலமுள்ள காலம் வரை, நீதான் எந்தன் முதல் குழந்தை
நெஞ்சம் ஒரு முறை நீ என்றது
கண்கள் மறுமுறை பார் என்றது

காதல் என்றால் அது பூவின் வடிவம்
ஆனால் உள்ளே அது தீயின் உருவம்
காதல் வந்தால் இந்த பூமி நழுவும்
பத்தாம் கிரகம் ஒன்று பாதம் பரவும்
காதல் வந்து நெஞ்சுக்குள்ளே நுழையும்
ஒரு தப்ப வெப்ப மாற்றங்களும் நிகழும்
காதல் வந்து கண்ணை தட்டி எழுப்பும்
அது ஊசி ஒன்றை உள்ளுக்குள்ளே அனுப்பும்
இந்த காதல் வந்தால் இலை கூட மாலை சுமக்கும்
காதல் என்ற வார்த்தையிலே
ஒன்றாய் சேர்ந்து நாம் தொலைவோம்
காதல் என்ற காற்றினிலே
தூசி போல நாம் அலைவோம்
நெஞ்சம் ஒரு முறை நீ என்றது
கண்கள் மறுமுறை பார் என்றது
ரெண்டு கரங்கலும் சேர் என்றது
உள்ளம் உனக்குத்தான் என்றது
சத்தமின்றி உதடுகளோ முத்தம் எனக்கு தா என்றது
உள்ளம் என்ற கதவுகளோ உள்ளே உன்னை வா என்றது

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar