Kishore Kumar Hits

S.A. Rajkumar - Sangeetha Vaanil şarkı sözleri

Sanatçı: S.A. Rajkumar

albüm: Chinna Poove Mellapesu


சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூ மயிலே
தோள் மீது வா உன்னைத் தாலாட்டுவேன்
காதல் சொன்னால் உன்னை சீராட்டுவேன்
என் நெஞ்சம் எங்கெங்கும் உன் மஞ்சம் தானே
சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூ மயிலே

ஆனந்த ராகங்களில்
நான் ஆலாபனை செய்கிறேன்
நான் உந்தன் கீதம் தன்னை
ஆராதனை செய்கிறேன்
கன்னங்களில் ஒரு வான் வண்ணமே
கண்டேன் இங்கே மலர் தேன் கிண்ணமே
கண்ணா உந்தன் குழல் ராகங்களால்
என் நாவிலும் இன்று குளிர்கின்றதே
ஒன்றோடு ஒன்றாகி உண்மைகள் கண்டுவர
சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூ மயிலே

பொன்மாலை வேளைகளில் உன் வாசல் நான் தேடினேன்
கண் எனும் ஓடங்களில்
கரை தேடி நான் ஓடினேன்
கண்ணல் எனும் இதழ் சுவை ஊட்டுதே
காணும் முகம் இன்று என்னை வாட்டுதே
கண் மைகளில் சுகம் வளர்கின்றதே
உன்னில் தினம் உடல் கரைகின்றதே
இன்றோடு தீராத பந்தங்கள் கொண்டு வர
சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூ மயிலே
தோள் மீது நான் உன்னைத் தாலாட்டுவேன்
காதல் சொல்லி உன்னை சீராட்டுவேன்
என் நெஞ்சம் என்றென்றும் உன் மஞ்சம் தானே
சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூ மயிலே

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar