Kishore Kumar Hits

Raj-Koti - Santhosham şarkı sözleri

Sanatçı: Raj-Koti

albüm: Maavari Gola


சந்தோசம் சந்தோசம்
வாழ்கையின் பாதி பலம்
சந்தோசம் இல்லை என்றால் மனிதர்க்கு ஏது பலம்
புயல் மையம் கொண்டால்
மழை மண்ணில் உண்டு
எந்த தீமை குள்ளும்
சிறு நன்மை உண்டு
ஒ -ஒ -ஒ ஒ -ஒ -ஒ
சந்தோசம் சந்தோசம்
வாழ்கையின் பாதி பலம்
சந்தோசம் இல்லை என்றால் மனிதர்க்கு ஏது பலம்
புயல் மையம் கொண்டால்
மழை மண்ணில் உண்டு
எந்த தீமை குள்ளும்
சிறு நன்மை உண்டு
ஒ -ஒ -ஒ ஒ -ஒ -ஒ
(இசை)
வெற்றியை போலவே
ஒரு தோல்வியும் நல்லதடி
வேப்பம் பூவிலும்
சிறு தேன்துளி உள்ளதடி
குற்றஞ் சொல்லாமல்
ஒரு சுற்றம் இல்லையடி
இலையும் புன்னகையால்
நீ இருட்டுக்கு வெள்ளையடி
தவறுகள் பண்ணி பண்ணி
திருந்திய பிறகுதான்
நாகரிகம் பிறந்ததடி
தவறுகள் குற்றம் அல்ல
சரிவுகள் வீழ்ச்சி அல்ல
பாடம் படி பவள கொடி
உள்ளம் என்பது
கவலைகள் நிரப்பும்
குப்பை தொட்டி இல்லை
உள்ளம் என்பது
பூந்தொட்டி ஆனால்
நாளை துன்பம் இல்லை
புயல் மையம் கொண்டால்
மழை மண்ணில் உண்டு
எந்த தீமை குள்ளும்
சிறு நன்மை உண்டு
ஒ -ஒ -ஒ ஒ -ஒ -ஒ
(இசை)
ஆதியில் ஆண்டவன்
இந்த பூமியை படைத்தானே
அவன் ஆசையை போலவே
இந்த பூமி அமையில்லையே
ஆண்டவன் ஆசையே
இங்கு பொய்யாய் போய் விடில்
மனிதனின் ஆசைகள்
மெய்யாவது சாத்தியமா
நன்மை என்றும் தீமை என்றும்
நாலு பேர்கள் சொல்லுவது
நம்முடைய பிழை இல்லையே
துன்பம் என்ற சிற்பிக்குள் தான்
இன்பம் என்ற முத்து வரும்
துணிந்த பின் பயம் இல்லையே
கண்ணீர் துளியில்
வைரங்கள் செய்யும்
கலைகள் கண்டுகொள்
காலுக்கு செருப்பு
எப்படி வந்தது
முள்ளுக்கு நன்றி சொல்
புயல் மையம் கொண்டால்
மழை மண்ணில் உண்டு
எந்த தீமை குள்ளும்
சிறு நன்மை உண்டு
ஒ -ஒ -ஒ ஒ -ஒ -ஒ
சந்தோசம் சந்தோசம்
வாழ்கையின் பாதி பலம்
சந்தோசம் இல்லை என்றால் மனிதர்க்கு ஏது பலம்

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar