Kishore Kumar Hits

Sundar C. Babu - Uyiril Pookkum Kaadhal şarkı sözleri

Sanatçı: Sundar C. Babu

albüm: Naadodigal (Original Motion Picture Soundtrack)


உயிரில் பூக்கும் காதல்
உணர்வின் ஆழ் நிலை
உணர்வை பார்ப்பது ஏது
உறவின் சூழ்நிலை
காவல் கைதியாய்
காதல் வாழும்
இருவரும் மீதிலும்
இல்லை ஓர் பாவம்
எல்லாமே சந்தர்ப்பம்
கற்பிக்கும் தப்பர்த்தம்
உயிரில் பூக்கும் காதல்
உணர்வின் ஆழ் நிலை
உணர்வை பார்ப்பது ஏது
உறவின் சூழ்நிலை

மனம் என்னும் குளத்தில்
விழி என்னும் கல்லை
முதன் முதல் எறிந்தாளே
அலை அலையாக ஆசைகள் எழும்ப
அவள் வசம் விழுந்தானே
நதி வழி போனால்
கரை வரக் கூடும்
விதி வழி போனானே
விதை ஒன்று போட
வேறொன்று முளைத்த
கதையென்று ஆனானே
என் சொல்வது என் சொல்வது
தான் கொண்ட
நட்புக்காக தானே தேய்ந்தான்
கற்பைப் போலே நட்பை பார்த்தான்
காதல் தோற்கும் என்றா பார்த்தான்
உலகில் எந்த காதல்
உடனே ஜெயித்தது
வலிகள் தாங்கும் காதல்
மிகவும் வலியது

நினைவுகளாலே நிச்சயதார்த்தம்
நடந்தது அவனோடு
அவனை அல்லாது அடுத்தவன் மாலை
ஏற்பது பெரும்பாடு
ஒரு புறம் தலைவன்
மறு புறம் தகப்பன்
இருகொல்லி எறும்பானாள்
பாசத்துக்காக காதலை தொலைத்து
ஆலையில் கரும்பானாள்
யார் காரணம் யார்
யார் பாவம் யாரைச்சேரும்
யார் தான் சொல்ல
கண்ணீர் வார்த்தாள் கண்ணீர் ஆனேன்
சுற்றம் செய்த குற்றம் தானே
உயிரில் பூக்கும் காதல்
உணர்வின் ஆழ் நிலை
உணர்வை பார்ப்பது ஏது
உறவின் சூழ்நிலை
காவல் கைதியாய்
காதல் வாழும்
இருவரும் மீதிலும்
இல்லை ஓர் பாவம்
எல்லாமே சந்தர்ப்பம்
கற்பிக்கும் தப்பர்த்தம்
உயிரில் பூக்கும் காதல்
உணர்வின் ஆழ் நிலை
உணர்வை பார்ப்பது ஏது
உறவின் சூழ்நிலை

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar