Kishore Kumar Hits

Sundar C. Babu - Ettu Kangalukkum şarkı sözleri

Sanatçı: Sundar C. Babu

albüm: Thoonganagaram (Original Motion Picture Soundtrack)


எட்டு கண்களுக்கும் ஒற்றைப் பார்வை தரும்
நட்பை தைத்தோம் கண்ணோடு
சட்டைப் பைகளுக்குள் நட்பைச் சேகரித்து
பொத்திக் கொண்டோம் நெஞ்சோடு
நான்கு இதயத்திற்கும் சேர்ந்து துடிப்பதற்கு
நட்பின் இதயம் தயங்காது
வரங்கள் ஏதுமின்றி யுகங்கள் வாழ்வதற்கு
நட்பை விட்டால் உறவேது
பிரிவேது பிரிவேது...
நட்புக்குள் பிரிவேது
பிரிவென்னும் சொல்கூட
நட்புக்குப் பிடிக்காது
தூரத்தில் இருந்தாலும்...
நம் நட்பு குறையாதே
தூக்கத்தில் இருந்தாலும்
நட்பெண்ணம் உறங்காதே
எட்டு கண்களுக்கும் ஒற்றைப் பார்வை தரும்
நட்பை தைத்தோம் கண்ணோடு
சட்டைப் பைகளுக்குள் நட்பைச் சேகரித்து
பொத்திக்கொண்டோம் நெஞ்சோடு
பிரிவேது பிரிவேது...
நட்புக்குள் பிரிவேது

தாய் முகம் நினைத்தால்
நண்பனின் முகம் எதிரினில் வருமே
சில நேரம் நோய் வந்து தவித்தால்
அவன் வார்த்தையில் மருத்துவ குணமே
வருடங்கள் ஐந்தோ பத்தோ கணக்குப் போட்டு பழகவில்லை
ஆனாலும் நூறு ஜென்ம நினைவுகள் சேர்த்தோமே
குலதெய்வ கோயிலுக்கு நேத்திக்கடன் நேர்ந்துக்கிட்டு
நண்பனின் பெயரை நாங்கள் பிள்ளைக்கு வைப்போமே
மன கஷ்டத்தில் வரும் காயத்தை
நம் கனவுக்குள் வரும் விருப்பத்தை
உடன் தீர்ப்பானே உயிர் நண்பன் மட்டும் தான்
எட்டு கண்களுக்கும் ஒற்றைப் பார்வை தரும்
நட்பை தைத்தோம் கண்ணோடு
சட்டைப் பைகளுக்குள் நட்பைச் சேகரித்து
பொத்திக்கொண்டோம் நெஞ்சோடு

காதலின் பிரிவு தனிமையில் தினம் வெறுமையைத் தருமே
அழகிய நம் நட்பினில் பிரிவு
நினைவுகள் எனும் சிறகினைத்தருமே
துன்பத்தை தூசித்தட்டி சுத்தம் செய்து பூஜை பன்னி
இன்பத்தைத் தந்த நட்பை இதயத்தில் வைப்போமே
பிரிவெல்லாம் பிரிவே இல்லை
பிரிந்தால் கூட கவலை இல்லை
நண்பர்கள் பிரியும் நாளில் நினைவுகள் இனித்திடுமே
எமன் கண் முன்னே வந்து நின்றாலும்
நமை பெற்றோரே கைவிட்டாலும்
துணை நிற்பானே உயிர் நண்பன் மட்டும் தான்
எட்டு கண்களுக்கும் ஒற்றைப் பார்வை தரும்
நட்பை தைத்தோம் கண்ணோடு
சட்டைப் பைகளுக்குள் நட்பைச் சேகரித்து
பொத்திக் கொண்டோம் நெஞ்சோடு
பிரிவேது பிரிவேது...
நட்புக்குள் பிரிவேது
பிரிவென்னும் சொல்கூட
நட்புக்குப் பிடிக்காது
தூரத்தில் இருந்தாலும்...
நம் நட்பு குறையாதே
தூக்கத்தில் இருந்தாலும்
நட்பெண்ணம் உறங்காதே
எட்டு கண்களுக்கும் ஒற்றைப் பார்வை தரும்
நட்பை தைத்தோம் கண்ணோடு
சட்டைப் பைகளுக்குள் நட்பைச் சேகரித்து
பொத்திக் கொண்டோம் நெஞ்சோடு
நான்கு இதயத்திற்கும் சேர்ந்து துடிப்பதற்கு
நட்பின் இதயம் தயங்காது
வரங்கள் ஏதுமின்றி யுகங்கள் வாழ்வதற்கு
நட்பை விட்டால் உறவேது

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar