கூரான பார்வைகள் குறும்பான வார்த்தைகள் என் தூக்கம் போனதே அன்பே பனி பெய்யும் இரவிலே பல நாட்கள் கனவிலே உன் தோளில் தூங்கினேன் என் அன்பே என் வீடு வருகிறாய் என் கையில் சேர்கிறாய் அந்நாளை எண்ணியே வாழ்ந்தேன் உன்னை அன்றி யாரிடம் என் கண்கள் போய் வரும் உன்னை எண்ணி எண்ணியே தேய்ந்தேன் கூரான பார்வைகள் குறும்பான வார்த்தைகள் என் தூக்கம் போனதே அன்பே உன் விரளது அசையுமா ஒரு தரிசனம் கிடைக்குமா என என உன் வாசலில் தினம் தினம் நான் நிற்கிறேன சட சட என வாசலில் விழும் விழும் மழைத் தூறலாய் மனம் மனம் இது மாறுதே தொலைவினில் உனைப் பார்த்ததும் நதியாக நீ நுரையாக நான் உன் வெள்ளம் உள்ள மட்டும் மனம் ததும்பிடப் பொங்குதே கரையாக நீ அலையாக நான் வர வேண்டாம் என்ற போதும் மறுபடி வந்து தீண்டுவேன் கூரான பார்வைகள் குறும்பான வார்த்தைகள் என் தூக்கம் போனதே அன்பே உனக்கென உடை உடுத்தணும் உனக்கென தினம் சமைக்கணும் உன் மடியினில் சாயணும் மரணம் வரை வாழனும் உன் விழிகளில் நீரெனில் என் மனம் அதைத் தாங்குமா அருகினில் நான் இருக்கையில் குளம் என நீர் தேங்குமா ஆற்றின் நீரில் கல்லை வீசி வளையல்கள் செய்து தந்தாய் வரம் என அதை வாங்கினேன் பேசும் போதே கண்ணை வீசி என் பேச்சை கொன்று விட்டாய் எப்படி இனி பேசுவேன் கூரான பார்வைகள் குறும்பான வார்த்தைகள் என் தூக்கம் போனதே அன்பே உன்னை அன்றி யாரிடம் என் கண்கள் போய் வரும் உன்னை எண்ணி எண்ணியே தேய்ந்தேன் கூரான பார்வைகள் குறும்பான வார்த்தைகள் என் தூக்கம் போனதே அன்பே