சிறு புன்னகை ஒருவரின் முகவரி அதில் கரைந்திடும் பிறர் மனம் அபகரி உறவு தொடங்குவதும் உயிர்கள் பழகுவதும் இனிய கவிதை என நினைக்கிறேன் அவளின் அணுகுமுறை பழகும் இயல்பு நிலை கலந்த நிமிடங்களை இரசிக்கிறேன் சில நாட்கள் தீண்டும் நினைவிலே பள்ளி வாழ்க்கை மீண்டும் மனதிலே அவள் பேசும் பேச்சைக் கேட்க கேட்க புதுமையே அந்த நேரம் மீண்டும் வாய்த்திடாத இனிமையே சிறு புன்னகை ஒருவரின் முகவரி அதில் கரைந்திடும் பிறர் மனம் அபகரி வரவு செலவுகளில் குறையும் பொழுதுகளை புதிய உறவுகளில் நிறைத்திடு அறிவு வெளியுலகில் அடையும் அவஸ்தைகளை பொழியும் நிலவொளியில் பொசுக்கிடு இன்பம் யாவும் காட்டும் மனத்திரை நம்மை மாற்றும் காலம் வகுப்பறை இதில் பாடம் கேட்கும் நீயும் நானும் ஒருவனே நம்மை பேச்சையாக்கும் தோழன் யாரு இறைவனே சிறு புன்னகை ஒருவரின் முகவரி அதில் கரைந்திடும் பிறர் மனம் அபகரி