Gangai Amaran - Suttum Vizhi şarkı sözleri
Sanatçı:
Gangai Amaran
albüm: Malargale Malarungal
ஆ-ஆ
அ-ஆ
ஆ-ஆ
ஆ-அ
ஆ-அ
சுட்டும் விழிச்சுடர் தான் கண்ணம்மா சூரியச் சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக் கருமை கொல்லோ
பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடி
சுட்டும் விழிச்சுடர் தான் கண்ணம்மா சூரியச் சந்திரரோ
♪
(நம்த-நம்த-நம்த-நம்த-நம்தன-நனனா)
(நம்தனன-நம்தனன-நம்தன-நனனா)
சோலை மலர் ஒளியோ
ஆ-அ-அ ஆ-ஆ-ஆ
ஆ-அ-அ ஆ-ஆ-ஆ
சோலை மலர் ஒளியோ உனது சுந்தரப் புன்னகை தான்
நீலக் கடல் அலையே உனது நெஞ்சின் அலைகளடி
கோலக் குயிலோசை உனது குரல் இனிமையடி
வாலைக் குமரியடி கண்ணம்மா மருவக் காதல் கொண்டேன்
சுட்டும் விழிச்சுடர் தான் கண்ணம்மா சூரியச் சந்திரரோ
♪
சாத்திரம் பேசுகிறாய்
ஆ-ஆ-ஆ ஆ-ஆ-ஆ
ஆ-ஆ-ஆ ஆ-ஆ-ஆ
சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடி
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரம் உண்டோடி
மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
காத்து இருப்பேனோ இதோ பார் கண்ணத்து முத்தமொன்று
சுட்டும் விழிச்சுடர் தான் கண்ணம்மா சூரியச் சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக் கருமை கொல்லோ
பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடி
சுட்டும் விழிச்சுடர் தான் கண்ணம்மா சூரியச் சந்திரரோ
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri