Kishore Kumar Hits

Dhina - Unnai Kadhali Yendru Sollava şarkı sözleri

Sanatçı: Dhina

albüm: Kandha Kottai (Original Motion Picture Soundtrack)


உன்னை காதலி என்று சொல்லவா
நீ அதற்கு மேலே அல்லவா
உன் கூந்தல் நேர்வாக்கிலே என் காதல் நெடுஞ்சாலை
உன் மூச்சுக்காற்றெல்லாம் அதில் தென்றல் தொழிசாலை
இதுவரைச் சொன்னது கவிதையல்ல
இதற்கு மேல் சொல்ல நான் கவிஞன் அல்ல
(உன்னை காதலி.)
அன்பே உந்தன் பார்வை ஏதோச் சொல்ல
கட்டி அணைத்தால் என்ன
எந்தன் பிரிவுக்கு பதில் சொல்ல
பெண்ணே நீயும் ஒரு கனவல்ல
ஒரு போராட்டம் தான் எந்தன் நெஞ்சுக்குள்ளே
நானும் சொல்ல
அன்னாந்து பார்க்கும் போது
ஆகாயம் நீல நிறம்
மண் மீது பார்க்கும் போது
என் வாசல் கோலம் நீதான்
விரல் நகத்தை கண்டால் கூட
முன் நின்று இரசிப்பேனே
உந்தன் நெஞ்சை கண்டால்
சொர்க்கம் என்றேப் போவேன் நானே
(உன்னை.)
சில்லென்று நீர்ப்போல நானிருந்தேன்
என்னை நீ தொட்டதால்
எந்தன் வெள்ளை தேகம் வெண்ணீராச்சு
கண்ணாடி சிற்பம் போல உன்னைக் கண்டேனே
இவள் முன்னாடி நான் இன்று
என்னை நானே காதல் கொண்டேன்
தீமூட்டும் ஆசையாலே தினந்தோறும் நின்றுப்போனேன்
தாய் வீட்டை நான் மறந்து உன்னோடு ஓடிவந்தேன்
ஆகாயம் பூமியெல்லாம் ஆண்டாண்டு காலமடி
ஆனாலும் என் காதல் அதைத்தாண்டி வாழுமடி
(உன்னை.)

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar