எதிரிலே வருவது யாரெனத் தெரியாது அகந்தையால் மனம் மாறினான் எதிரிலே வருவது யாரெனத் தெரியாது அகந்தையால் மனம் மாறினான் இந்திரன் ஒரு கணம் தடுமாறினான் எதிரிலே வருவது யாரெனத் தெரியாது அகந்தையால் மனம் மாறினான் இந்திரன் ஒரு கணம் தடுமாறினான் சிவபிரான் தான் ஒரு பூதமாய் தோன்றிட வஜ்ராயுதம் வீசினான் சிவபிரான் தான் ஒரு பூதமாய் தோன்றிட வஜ்ராயுதம் வீசினான் உண்மை வடிவுகண்டு கண் கூசினான் எதிரிலே வருவது யாரெனத் தெரியாது அகந்தையால் மனம் மாறினான் இந்திரன் ஒரு கணம் தடுமாறினான் ♪ மன்னிப்பு வேண்டியதும் சங்கரனின் சீற்றமது பெருங்கடலில் விழுந்து விடவே மன்னிப்பு வேண்டியதும் சங்கரனின் சீற்றமது பெருங்கடலில் விழுந்து விடவே வண்ணக் குழந்தையாய் வளர்ந்தாலும் நாளடைவில் வாளெடுத்து வானில் வந்தே வண்ணக் குழந்தையாய் வளர்ந்தாலும் நாளடைவில் வாளெடுத்து வானில் வந்தே எய்தவனையே அம்பு பதம் பார்ப்பது போலே கயிலாயம் எங்கே என்றே எக்காளம் இட்டதுமே சக்ரத்தார் தலையெடுத்த ஈஸ்வரனைக் காண வருக ஜலந்திரனை வீழ்த்தியதைக் காண வருக எதிரிலே வருவது யாரெனத் தெரியாது அகந்தையால் மனம் மாறினான் இந்திரன் ஒரு கணம் தடுமாறினான் ♪ பரிமள நாயகி மைவார் குழலியோடு பரமசிவன் எழுந்தருளுவான் பரிமள நாயகி மைவார் குழலியோடு பரமசிவன் எழுந்தருளுவான் பவித்ரமாம் துளசி தலவிருட்சமாய் வளர்ந்திருக்க பழகுகின்ற முறை காட்டுவான் பவித்ரமாம் துளசி தலவிருட்சமாய் வளர்ந்திருக்க பழகுகின்ற முறை காட்டுவான் சங்கு ஒரு தீர்த்தமாய் சக்கரமும் தீர்த்தமாய் சரியான தீர்ப்பு சொல்வான் சாந்தமே நற்குடி சந்திக்க விற்குடி சஞ்சலங்கள் தீர்ப்பேன் என்பான் சந்ததமும் காப்பேன் என்பான் என்றென்றும் காப்பேன் என்பான் இக்குடி யான் என்றென்றும் காப்பேன் என்பான்