Kishore Kumar Hits

K. Veeramani - Ingae Irukkum şarkı sözleri

Sanatçı: K. Veeramani

albüm: Ashta Veerattaanam


இங்கே இருக்கும் சூலத் தீர்த்தத்தின்
பெருமையை அறியாமல்
கங்கையை வேண்டி நீட்டிய கைகள்
குறுகிப் போனதம்மா
இங்கே இருக்கும் சூலத் தீர்த்தத்தின்
பெருமையை அறியாமல்
கங்கையை வேண்டி நீட்டிய கைகள்
குறுகிப் போனதம்மா
நொந்துப் போன ரிஷி
உயிர் விடப் போக
வந்தனன் சிவபெருமான்
அந்தப் பழுதை நீக்கிய
அற்புதம் குறுக்கையில் நிகழ்ந்ததம்மா
திருக்குறுக்கையில் நிகழ்ந்ததம்மா
திருக்குறுக்கையில் நிகழ்ந்ததம்மா
இங்கே இருக்கும் சூலத் தீர்த்தத்தின்
பெருமையை அறியாமல்
கங்கையை வேண்டி நீட்டிய கைகள்
குறுகிப் போனதம்மா

பரமன் ஓர் புறம்
பார்வதி ஓர் புறம்
பிரிந்தே தவம் இருந்தார்
அசுரசக்திகள் ஆதிக்கம் ஓங்க
தேவர்கள் தவித்திருந்தார்
கடுந்தவம் கலைத்து
சக்தியை இணைக்க
காமன் வில் தொடுத்தான்
நடுக்கண் திறந்தான்
நெருப்பை எறிந்தான்
மாறன் மறைந்துவிட்டான்
மாறன் மறைந்துவிட்டான்
பிடிச் சாம்பல் ஆகிவிட்டான்
இங்கே இருக்கும் சூலத் தீர்த்தத்தின்
பெருமையை அறியாமல்
கங்கையை வேண்டி நீட்டிய கைகள்
குறுகிப் போனதம்மா

உடலில் உயிரை
உயிரில் உணர்வை
அமைத்தவன் ஈசனன்றோ
படைத்தவனுக்கே பாடம் சொல்வது
சிறுபிள்ளைத்தனம் அன்றோ
உடற் கலப்பில்லா தவக்கனல்
இரண்டும் மீண்டும் சங்கமமே
சிவ சக்தி ஐக்கியம் குறுக்கையில் நடந்தது
உயிர்ப்பிச்சை கிடைத்ததம்மா
உயிர்ப்பிச்சை கிடைத்ததம்மா
மன்மதன் ரதிக்கு தெரிகின்றான்
இங்கே இருக்கும் சூலத் தீர்த்தத்தின்
பெருமையை அறியாமல்
கங்கையை வேண்டி நீட்டிய கைகள்
குறுகிப் போனதம்மா
நொந்துப் போன ரிஷி
உயிர் விடப் போக
வந்தனன் சிவபெருமான்
அந்தப் பழுதை நீக்கிய
அற்புதம் குறுக்கையில் நிகழ்ந்ததம்மா
திருக்குறுக்கையில் நிகழ்ந்ததம்மா
திருக்குறுக்கையில் நிகழ்ந்ததம்மா
இங்கே இருக்கும் சூலத் தீர்த்தத்தின்
பெருமையை அறியாமல்
கங்கையை வேண்டி நீட்டிய கைகள்
குறுகிப் போனதம்மா
குறுகிப் போனதம்மா
குறுகிப் போனதம்மா

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar