மயிலாப்பூரின் மகத்துவம் சரித்திரம் நினைத்ததை தருவாள் கற்பகம் மயிலாப்பூரின் மகத்துவம் சரித்திரம் நினைத்ததை தருவாள் கற்பகம் அவள் மலரடி தொழுபவர் பெறுவது மங்களம் அனுபவமான சத்தியம் அவள் மலரடி தொழுபவர் பெறுவது மங்களம் அனுபவமான சத்தியம் மயிலாப்பூரின் மகத்துவம் சரித்திரம் நினைத்ததை தருவாள் கற்பகம் ♪ பங்குனித் திங்கள் பன்னிரெண்டு நாட்கள் எங்கும் காணாத் திருவிழா பஞ்சமூர்த்திகள் பவளக்கால் விமான வீதி உலாவரும் முதல் விழா அன்று நள்ளிரவு அன்னை மயிலாய் பூஜை செய்யும் திருவிழா அடுத்த நாளில் மண்டகப் படிவிழா மூன்றாம் நாள் நந்தி விழா நான்காம் நாள் பல வாகனம் ஐந்தாம் நாள் மக தரிசனம் ஆறாம் நாள் சங்கு அபிஷேகம் ஏழாம் நாள் ரத உற்சவம் பின்பு எட்டாம் நாள் அறுபத்தி மூவர்கள் நாயன்மார் திருவிழா மயிலாப்பூரின் மகத்துவம் சரித்திரம் நினைத்ததை தருவாள் கற்பகம் மயிலாப்பூரின் மகத்துவம் சரித்திரம் நினைத்ததை தருவாள் கற்பகம் ♪ பிச்சை பாத்திரம் ஏந்திய சிவனை மோகினி அழைப்பாள் ஒன்பதாம் நாள் பத்தாம் நாள் இரவில் திருமண வைபவம் கற்பகம் கபாலி ஐக்கியம் ஊடலும் கூடலும் மாறி மாறி ஆடல் காட்டும் உமை மனம் பாவம் அடியார் சுந்தரமூர்த்தி தூது சென்றால் சமரசம் மக்கள் எல்லாம் மிக மகிழ்ந்திடும் துக்கம் எல்லாம் அங்கு கலைந்திடும் திக்கெட்டும் வெடி முழங்கிடும் தெய்வங்கள் வரம் வழங்கிடும் அந்த தேனான கண்காட்சி மாறாது மறையாது வருகவே மயிலாப்பூரின் மகத்துவம் சரித்திரம் நினைத்ததை தருவாள் கற்பகம் மயிலாப்பூரின் மகத்துவம் சரித்திரம் நினைத்ததை தருவாள் கற்பகம் அவள் மலரடி தொழுபவர் பெறுவது மங்களம் அனுபவமான சத்தியம் அவள் மலரடி தொழுபவர் பெறுவது மங்களம் அனுபவமான சத்தியம் மயிலாப்பூரின் மகத்துவம் சரித்திரம் நினைத்ததை தருவாள் கற்பகம் மயிலாப்பூரின் மகத்துவம் சரித்திரம் நினைத்ததை தருவாள் கற்பகம்