புன்னகைக்கு ஈடேதம்மா ஆ-ஆ-ஆ-ஆ புன்னகைக்கு ஈடேதம்மா இந்தப் புவனங்கள் முழுதாலும் மகராணி நீயன்றோ பொன்னடிகள் சரணம் அம்மா உன் புன்னகைக்கு ஈடேதம்மா ♪ நான் எனும் ஆணவத்தை ஓடெனவே ஓடேந்தி காபாலி எனும் பெயரில் அவன் திரிகிறான் நான் எனும் ஆணவத்தை ஓடெனவே ஓடேந்தி காபாலி எனும் பெயரில் அவன் திரிகிறான் கேட்டதை கொடுப்பதற்கு நீ இருக்க ஏனோ? பக்தரிடம் பிச்சைக் கேட்கிறான் மக்கள் தான், அப்பனை கெஞ்சுவர், உலகிலே மக்கள் தான், அப்பனை கெஞ்சுவர், உலகிலே இதென்ன மாற்றமோ? தந்தைக்கு ஏற்குமோ? சிவன் செய்கை அருட்கோலமோ? புன்னகைக்கு ஈடேதம்மா இந்தப் புவனங்கள் முழுதாலும் மகராணி நீயன்றோ பொன்னடிகள் சரணம் அம்மா உன் புன்னகைக்கு ஈடேதம்மா ♪ ஊர் உலகம் சுற்றாமல் உனைப் பார்க்க வந்தவர்கள் ஒரே நாளில் பலன் யாவும் பெறுவர் அன்றோ? ஊர் உலகம் சுற்றாமல் உனைப் பார்க்க வந்தவர்கள் ஒரே நாளில் பலன் யாவும் பெறுவர் அன்றோ? கற்பகத்தின் பொற்பதங்கள் பற்றியதால் தானோ அற்புதங்கள் நிகழுதம்மா கணந்தொறும், நினைந்துமே சுகம் பெறும், பாக்கியம் கணந்தொறும், நினைந்துமே சுகம் பெறும், பாக்கியம் கனவல்ல இது நிஜம் கண்டது நிச்சயம் திருக்காட்சி தித்திக்குமே புன்னகைக்கு ஈடேதம்மா இந்தப் புவனங்கள் முழுதாலும் மகராணி நீயன்றோ பொன்னடிகள் சரணம் அம்மா உன் புன்னகைக்கு ஈடேதம்மா அ-ஆ-ஆ-அ-ஆ-ஆ